Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Janhvi Kapoor: கிராமத்து பெண்ணாக ஜான்வி கபூர்.. ‘பெடி’ படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது!

Peddi Movie Update: தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஜான்வி கபூர். ராம் சரணின் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக உருவாகிப்படும் படம்தான் பெடி. இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் நடிக்கும் கதாபாத்திரத்தின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.

Janhvi Kapoor: கிராமத்து பெண்ணாக ஜான்வி கபூர்.. ‘பெடி’ படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது!
ஜான்வி கபூரின் பெடி படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Nov 2025 18:06 PM IST

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ராம் சரண் (Ram Charan). இவரின் நடிப்பில் இறுதியாக தி கேம் சேஞ்சர் (Game Changer) என்ற திரைப்படமானது வெளியானது. இந்த திரைப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தமிழ் முன்னணி இயக்குநரான எஸ். சங்கர் (S. Shankar) இயக்கியிருந்தார். இப்படத்தின் மூலமாகத்தான் இவர் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் தயாராகியிருந்த நிலையில், ரூ 100 கோடிகள் மட்டுமே வசூல் செய்திருந்தது. இந்த படத்தை அடுத்தாக நடிகர் ராம் சரணின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும், அதிரடியாகவும் உருவாகிவரும் படம்தான் பெடி (Peddi).

இப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கிவருகிறார். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்துவருகிறார். இந்நிலையில் இன்று 2025 நவம்பர் 1ம் தேதியில் நடிகர் ஜான்வி கபூரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் இவர் “அச்சியம்மா” (Achiyyamma ) என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

இதையும் படிங்க: ஷாலினிக்கு மிகவும் நன்றியுள்ளவன்.. அவர் இல்லாமல் இது நடந்திருக்காது – அஜித் குமார்!

ஜான்வி கபூரின் பெடி திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் :

இந்த பெடி திரைப்படமானது ராம் சரணின் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படம் போன்ற கதைக்களத்துடன் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. முற்றிலும் கிராமத்து கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அதிரடி ஆக்ஷ்ன் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துவருகிறார். இப்படம் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 27ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘ஒருவர் மட்டுமே காரணமல்ல’ கரூர் துயரம் குறித்து மனம் திறந்த நடிகர் அஜித்!!

பெடி திரைப்படத்தின் நடிகர்கள்:

இந்த பெடி படமானது ஆர்மபத்தில் RC16 என அறிவிக்கப்பட்ட நிலையில், பெடி என படக்குழு அறிவித்திருந்தது. இதில் நடிகர்கள் ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, விஜி சந்திரசேகர் போன்ற பிரபலங்கள் பலரும் நடித்துவருகின்றனர். இந்த படத்தில் நடிகை சமந்தா சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடவுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகிறது. மேலும் இப்படத்தில் ஜான்வி கபூரின் கதாபாத்திர அறிமுகத்தை தொடர்ந்து பல பிரபலங்களின்  அறிமுக போஸ்டர்கள் விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.