Jailer : அலப்பற கெளப்புறோம்.. இரண்டு ஆண்டுகளைக் கடந்த ரஜினியின் ஜெயிலர் திரைப்படம்!
2 Years Of Jailer Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் வெளியாகி எதிர்பாராத வரவேற்பை பெற்ற படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் வெளியான இப்படமானது 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இது குறித்து படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar). இவரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடித்த முதல் படம்தான் ஜெயிலர் (Jailer). கடந்த 2023ம் ஆண்டு இந்த படமானது, பான் இந்தியா அளவிற்கு வெளியானது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) நடித்திருந்தார். இந்த படமானது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படமானது முற்றிலும் அதிரடி ஆக்ஷ்ன் திரில்லர் மற்றும் நகைச்சுவை என மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது.
கடந்த 2023ம் ஆண்டில் விஜய்யின் லியோ படத்திற்கு இணையான வசூலைப் பெற்றிருந்தது. இந்த படமானது வெளியாகி இன்று 2025, ஆகஸ்ட் 10ம் தேதியோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இதைக் கொண்டாடும் விதத்தில் படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பதிவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : கேரளாவில் மோகன்லாலுக்கு ஈடுகொடுக்கும் ரஜினிகாந்த்.. டிக்கெட் புக்கிங்கில் வசூலை அள்ளும் கூலி படம்!
ஜெயிலர் திரைப்படம் குறித்து வெளியான பதிவு :
Roaring 2 years of Record-Making #Jailer 🔥🔥🔥 #2YearsOfJailer@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial #Jailer pic.twitter.com/qSKinNFv0m
— Sun Pictures (@sunpictures) August 10, 2025
இந்த ஜெயிலர் திரைப்படமானது மொத்தமாக சுமார் ரூ. 650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் முன்னணி வேடத்தில் நடிக்க, அவருடன் நடிகர்கள் மிர்னா மேனன், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், விநாயகன், மோகன்லால், வசந்த் ரவி மற்றும் ஜாக்கி ஷெரஃப் என பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியை அடுத்ததாக தற்போது ஜெயிலர் 2 படமானது மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகிவருகிறது.
இதையும் படிங்க : ’வீட்ல போய் நான் காலில் விழணும்’ வைரலாகும் அஜித் – ஷாலினி வீடியோ!
ஜெயிலர் 2 திரைப்படம் :
இந்த ஜெயிலர் 2 திரைப்படத்தையும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்த்தான் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்து வருகிறார். நடிகர் சிவராஜ்குமாரும் இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இரண்டாம்கட்ட ஷூட்டிங் வட இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இப்படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரஜினிகாந்த்தின் நடிப்பில் கூலி படமானது வெளியீட்டிற்குக் கடத்திருக்கும் நிலையில், இப்படம் சுமார் ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.