Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madharaasi : சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தின் டீசர் ரெடி.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

Madharaasi Movie Teaser Update : சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாக உருவாகியிருப்பது மதராஸி திரைப்படம். இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்தும் அது எப்போது வெளியாகும் என்பது பற்றியும், இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகிறது. அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

Madharaasi : சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தின் டீசர் ரெடி.. எப்போது ரிலீஸ் தெரியுமா?
மதராஸி திரைப்படம் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 11 Aug 2025 18:53 PM

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss). இவரின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் படங்ககள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சிக்கந்தர் (Sikandar). சல்மான்கான் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம், கடந்த 2025, மார்ச் மாதத்தில் வெளியானது.  இதனையடுத்து அவர் தமிழில்  இயக்கிவந்த படம்தான் மதராஸி (Madharaasi). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார்.  இது இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் 23வது படம். இந்த படத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து முதல் பாடலானது சமீபத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தற்போது இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பதை பற்றிய தகவல்கள் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டீசரானது தயாராகியுள்ளதாம், இது சுமார் 59 வினாடிகளுடன் உருவாகியிருப்பதாக கூறபடும் இந்த டீசர், இந்த வாரத்தின் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலு ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் வெளியீட்டின்போது, திரையரங்குகளிலும் ஒளிபரப்பப்டுவதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இது குறித்து படக்குழு எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இது 1950 மாடல்… பார்ட்ஸ் எல்லாம் மாத்திட்டாங்க – கூலி பட விழாவில் கலகலப்பாக பேசிய ரஜினிகாந்த்!

மதராஸி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

மதராஸி படத்தி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த்தின் தர்பார் படத்தை அடுத்து, பல ஆண்டுகள் பின் இந்த மதராஸி படமானது தமிழில் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இது இவரின் இரண்டாவது தமிழ் திரைப்படமாககும். மேலும் முக்கிய வேடத்தில் நடிகர்கள் விக்ராந்த், வித்யுத் ஜம்வால், பிஜூ மேனன், பிரேம் குமார் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது வட இந்திய மாஃபியா கும்பலுக்கும், தமிழ் கப்பல் படையினருக்கும் நடக்கும் சண்டையை பற்றிய படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திடாத மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இப்படம் வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

மதராஸி படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் எப்போது

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையமைப்பில், இப்படத்தின் முதல் பாடலான சலம்பல என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடியிருந்தார். மேலும் இப்படத்தின் இரண்டாவது பாடல், காதல் மற்றும் ரொமாண்டிக் பாடலாக உருவாகியுள்ளதாம். இப்படலானது ரஜினிகாந்தின் கூலி படத்தின் வெளியீட்டை தொடர்ந்து, ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.