Sivakarthikeyan : வெங்கட் பிரபு புதிய படம்.. சிவகார்த்திகேயனுக்கு ஜோடி இந்த நடிகையா?
Venkat Prabhu And Sivakarthikeyan Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன். இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெங்கட் பிரபு (Venkat Prabhu). இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கோட் (The GOAT). தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) முன்னணி நடிப்பில் வெளியான இப்படமானது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இந்த படமானது கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி கோலிவுட் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்திருந்தது. இதை அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு , சிவகார்த்திகேயனுடன் (Sivakarthkeyan) புதிய படத்தை இயக்கவுள்ளார். இது குறித்து சமீபத்தில் தலைவன் தலைவி படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்திருந்தார். இந்த படமானது சிவகார்த்திகேயனின் முன்னணி நடிப்பில் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் தெரியுமா?. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் (Mrunal thakur) நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நடிகை மிருணாள் தாக்கூரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க : ’எனது படத்திலேயே கம்பேக் கொடுப்பேன்’ நடிகர் ஸ்ரீ குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்!
நடிகர் மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படங்கள் ;
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வரும் 2025 , செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாகவுள்ள படம் மதராஸி. அதிரடி ஆக்ஷ்ன் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. இதை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்துவருகிறார்.
இதையும் படிங்க : கேரளாவில் மோகன்லாலுக்கு ஈடுகொடுக்கும் ரஜினிகாந்த்.. டிக்கெட் புக்கிங்கில் வசூலை அள்ளும் கூலி படம்!
இப்படத்தின் ஷூட்டிங்கானது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறதாம். இது வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் புதிய படத்திலும், இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுடன் புதிய படத்திலும் நடிக்கவுள்ளாராம். கிட்டத்தட்ட சிவகார்த்திகேயன் தனது கைவசத்தில் 4 படங்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலும் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், படத்தின் அறிவிப்புகள் மதராஸி திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பின் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.