AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்னவொரு நடிப்பு.. இந்திய சினிமாவிற்கான ரீசெட் பட்டன் – துரந்தர் 2 படத்தை பாராட்டிய ராஜமௌலி மற்றும் ராம் கோபால் வர்மா!

Dhurandar The Revenge: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள படம்தான் துரந்தர் 2. இது 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றவரும் நிலையில், இப்படத்தை பார்த்த பேமஸ் இயக்குநர்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் ராம் கோபால் வர்மா இருவரும் தங்களின் பாணியில் பாராட்டியுள்ளனர்.

என்னவொரு நடிப்பு..  இந்திய சினிமாவிற்கான ரீசெட் பட்டன் – துரந்தர் 2 படத்தை பாராட்டிய ராஜமௌலி மற்றும் ராம் கோபால் வர்மா!
எஸ்.எஸ். ராஜமௌலி, ரன்வீர் சிங் மற்றும் ராம் கோபால் வர்மாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 Mar 2026 12:09 PM IST

இந்தி சினிமாவில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதியில் வெளியான திரைப்படம் துரந்தர் (Dhurandar). இந்த படமானது ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. பாலிவுட் சினிமாவையும் கடந்து தென்னிந்திய மக்கள் மத்தியிலும் இப்படமானது சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதில் நாயகனாக ரன்வீர் சிங் (Ranveer Singh) நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை சாரா அர்ஜுன் (Sara Arjun) நடித்திருந்தார். இப்படமானது பாகிஸ்தான் தாக்குதல், ஸ்பை திரில்லர் போன்ற கதையில் வெளியாகியிருந்தது. துரந்தர் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் தொடர்ச்சியாக வெளியான திரைப்படம்தான் துரந்தர் தி ரிவெஞ்ச் (Dhurandar The Revenge). ரன்வீர் சிங்கின் இப்படம் கடந்த 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக தென்னிந்திய மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இப்படத்தை பல தென்னிந்திய மற்றும் பாலிவுட் பிரபலங்களும் பாராட்டிவருகிறார்கள். அந்த விதத்தில் பான் இந்திய இயக்குநர்கள் எஸ்.எஸ். ராஜமௌலி (S.S. Rajamouli) மற்றும் ராம் கோபால் வர்மா (Ram Gopal Varma) இருவருமே இப்படத்தை பாராட்டியுள்ளனர். இதில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் கருத்து மக்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சிலம்பரசனின் STR51 படத்தின் டைட்டில் இதுவா? படத்தின் ஷூட்டிங் எப்போது தொடக்கம் தெரியுமா?

துரந்தர் தி ரிவெஞ்ச் படத்தை பாராட்டி எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிட்ட பதிவு:

இந்த பதிவில் இயக்குநர் ராஜமௌலி, “எனக்கு துரந்தர் 1 படம் மிகவும் பிடித்திருந்தது, ஆனால அதிலும் மேலாக துரந்தர் தி ரிவெஞ்ச் பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டமாக இருந்தது. இப்படத்தின் எழுத்து, இசை, நடிகர்கள் போன்றவை குறையற்றவை. இயக்குனர் ஆதித்ய தார் மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளார். 4 மணி நேரம் கொண்ட ஒரு திரைப்படத்தை இயக்கி,வெளியிடுவதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். கடைசி ஃபிரேம் வரை பார்வையாளர்கள் இருக்கையில் கட்டிபோட்டுவிட்டார்.

இதையும் படிங்க: தனுஷின் ஸ்பீசிற்கு தயாரா? கர படத்தின் ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா?

ரன்வீர் சிங்கின் நடிப்பு அற்புதம். ஹம்ஸாவாகவும் ஜஸ்கிரத்தாகவும் நீங்கள் எங்களை மெய்மறக்கச் செய்துவிட்டார்”. அதில் மேலும் ஆர். மாதவன் மற்றும் பாடலுழுவினரையும் அவர் பாராட்டி பதிவை வெளியிட்டுள்ளார்.

துரந்தர் தி ரிவெஞ்ச் படத்தை பாராட்டிய இயக்குநர் ராம் கோபால் வர்மா எக்ஸ் பதிவு:

அதில் இயக்குநர் ராம் கோபால் வர்மா, ” துரந்தர் 2 ஒரு திரைப்படம் அல்ல. இது இந்திய சினிமாவிற்கான ரீசெட் பட்டன். மார்ச் 19, 2026-க்கு முன்பு எடுக்கப்பட்ட அனைத்துப் படங்களையும் மறந்துவிடாமல் இருப்பது அனைத்துத் திரைப்படத் தயாரிப்பாளர்களின் தரப்பிலும் ஒரு முட்டாள்தனமாகும். அனைவரும் தாங்கள் எடுக்கவிருக்கும் அனைத்துப் படங்களையும் துரந்தர் 2 உடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், இல்லையெனில் அதன் தீயில் அவர்கள் அழிந்து போவார்கள்” என அதில் அவர் தெரிவித்துள்ளார். இவர் துரந்தர் 2 படத்தை புகழ்வதுபோன அதே தேதியில் வெளியாகவிருந்த பிரபல நடிகரின் படத்தை கடுமையாக பேசியுள்ளார். தற்போது இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டுவருகிறது.

Follow Us