AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் சேதுபதி டூ விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடி.. இந்த சிறுமி யாருனு தெரியுமா?

Tamil Actress Childhood Photo: தென்னிந்திய சினிமாவில் லீட் கதாநாயகியாக இருந்து, தமிழ் தெலுங்கு மற்றும் மலையலாம் போன்ற மொழிகளில் இந்த சிறுமி நடித்திருக்கிறார். இந்த புகைப்படத்தில் இருப்பவர் எந்த நடிகைனு தெரியுமா?. இவர் தெலுங்கு 80ஸ் நடிகரின் மகள், ஆனால் தற்போது தமிழில் லீட் நடிகை. யார் என விவரமாக பார்க்கலாம்.

விஜய் சேதுபதி டூ விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடி.. இந்த சிறுமி யாருனு தெரியுமா?
பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 22 Mar 2026 08:29 AM IST

சினிமாவில் பொதுவாக பிரபல நடிகர்கள், நடிகைகள் போன்றவர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவரும். அந்த வகையில் அவர்களின் அடையாளம் தெரியாத புகைப்படங்களும், பார்ப்பதற்கு இது எந்த நடிகை அல்லது நடிகர் என நமக்கே சந்தேகத்தை ஏற்படுத்தும். அந்த விதத்தில் மேலே இருக்கும் புகைப்படத்தில் உள்ள சிறுமி யார் தெரியுமா?. இவரின் தந்தை 80ஸ் காலகட்டத்தில் தெலுங்கில் பிரபல நடிகர் (80S Telugu Actor). அவரின் மரணத்திற்கு பிறகு, இந்த நடிகை தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கியிருந்தார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். அந்த வகையில் தமிழில் தனுஷ் (Dhanush) முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) வரை, தெலுங்கில் வெங்கடேஷ் (Venkatesh) முதல் விஜய் தேவரகொண்டா (Vijay Devarekonda) வரை பல உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

மேலும் இவருக்கு தமிழில் பல ஹிட் படங்களும் உள்ளது. நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தும் உள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு சினிமாவை நோக்கி தனது இலக்கை வைத்துள்ளார். அவ்வாறு பிரம்மாண்ட கனவுகளை காணலாம் இந சிறுமி யாருனு தெரியுமா?. இது வேறு எந்த நடிகையும் இல்லை, காக்கா முட்டை (kakka Muttai), தர்மதுரை (Dharma Dhurai) போன்ற ஹிட் படத்தை கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்தான் (Aishwarya Rajesh).

இதையும் படிங்க: இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுமா? இவர் இன்னும் டாப் நடிகைதான்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் போட்டோஷூட் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா பயணம்:

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபல 80ஸ் தெலுங்கு நடிகர் ராஜேஷ் என்பவரின் மகள் ஆவார். இவர் ஆரம்பத்தில் சிறுவயதில் சில படங்களில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்படாத வேடங்களிலும் படங்களில் நடித்து, தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியிருந்தார். அந்த விதத்தில் இவருக்கு மக்கள் மத்தியில் இவருக்கு பிரபலத்தை தேடித்தந்த திரைப்படம் ரம்மி. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து, மக்களிடையே வரவேற்கப்பட்டார். மேலும் திருடன் போலி, காக்கா முட்டை. இடம் பொருள் ஏவல், தர்மதுரை என தொடர்ந்து வித்யாசமான ரோல்களில் நடித்து பிரபலமானார்.

இதையும் படிங்க: மணிரத்னம் சார் சொன்ன ஒரு வார்த்தை.. நாள் முழுவதும் அப்படித்தான் இருந்தேன் – திரிஷா சொன்ன விஷயம்!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்துவந்த இவர், தற்போது தெலுங்கு சினிமாவில் நடிப்பதை ஆர்வம் காட்டிவருகிறார். தெலுங்கில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான சங்கராந்திகி வாஸ்துனம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இதையடுத்து ஹோ சுகுமாரி மற்றும் உத்தரகாண்டம் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். இதையடுத்து தமிழிலும் புது படங்களில் நடிப்பதற்கு கதைகளை கேட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

Follow Us