Trisha Krishnan: மணிரத்னம் சார் சொன்ன ஒரு வார்த்தை.. நாள் முழுவதும் அப்படித்தான் இருந்தேன் – திரிஷா சொன்ன விஷயம்!
Trisha About Mani Ratnam: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இவர் இயக்குநர் மணிரத்னம் குறித்து பேசியுள்ளார்.
நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan)தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்துவருகிறார். இவர் சினிமாவில் ஆரம்பத்தில் ஜோடி (Jodi) என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்து நுழைந்த நிலையில், பின் இயக்குநர் அமீரின் (Ameer) இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே (Mounam Pesiyadhe) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலே சூர்யாவிற்கு (Suriya) ஜோடியாக நடித்திருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்தாக சாமி (Saamy), மனசெல்லாம், லேசா லேசா (Lesa Lesa) போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து நீ மனசு நாக்கு தெலுசு என்ற படத்தின் மூலம் தெலுங்கில் நாயகியாக நுழைந்தார். இதையடுத்து தனது 2வது தெலுங்கு படமான வருஷம் படத்தில் பிரபாஸிற்கு (Prabhas) ஜோடியாக நடித்து ஹிட் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவர் இயக்குநர் மணிரத்னம்முதல் ஹரி வரை பல்வேறு இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த திரிஷா, இயக்குநர் மணிரத்னத்துடன் (Mani Ratnam) பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) படத்தில் பணியாற்றியது பற்றி தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: கடைசி 30 நிமிடங்கள் கண்ணீரில் கலங்கடிக்கும்.. ஓடிடியில் வெளியான Couple Friendly எப்படி இருக்கு?
இயக்குநர் மணிரத்தினம் குறித்து பேசிய நடிகை திரிஷா கிருஷ்ணன்:
அந்த நேர்காணலில் தொகுப்பாளர், இயக்குநர் மணிரத்னம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி, உங்களை எப்போதாவது பாராட்டியிருக்கிறாரா? என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த திரிஷா, “மணிரத்னம் சார் பொதுவாக பெரியதாக எதுவும் பேசமாட்டார். அவரு என்ன எமோஷ்னல் இருக்காருன்னு முகத்தில் எதுவும் தெரியாது.
இதையும் படிங்க: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் நன் நடிக்கும்போது என்னை ஒரு விஷயத்தில் பாராட்டியிருந்தார். எதோ ஒரு காட்சியில் நான் நடித்து முடித்தவுடன், என்னை பார்த்து “குட் ஜாப் திரிஷ்” என கூறினார். அந்த ஒரு வார்த்தை எனக்கு அந்த நாள் முழுவதுமே மிகவும் மகிழ்ச்சியை தந்தது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
திரிஷா கிருஷ்ணனின் போட்டோஷூட் பதிவு :
View this post on Instagram
நடிகை திரிஷா கிருஷ்ணனின் புது படம் :
நடிகை திரிஷா கிருஷ்ணனின் நடிப்பில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின் கருப்பு படமானது வெளியாக காத்திருக்கிறது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில் 2026 மே 14ம் தேதியில் வெளியாகிறது. இதையடுத்து தெலுங்கில் விஸ்வம்பரா என்ற படத்திலும் நடித்துள்ளார். இதை தவிர இவருக்கு தற்போது பெரிதாக எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.