RJ Balaji: கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் நிச்சயம் பவர்ஃபுல்லாக இருக்கும் – ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
RJ Balaji About Karuppu Movie Climax: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம்தான் கருப்பு. இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் கிளைமேக்ஸ் குறித்தும் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் சூர்யா(Suriya). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் “கருப்பு” (Karuppu) மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) என இரு திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கிறது. அதில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ. Balaji) இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம்தான் கருப்பு. இப்படம் கடந்த 2024ம் ஆண்டில் சூர்யா45 என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிக தொடர்ந்து டைட்டில் வெளியிடப்பட்டிருந்தது. இப்படத்தில் சூர்யாவுடன் நடிகர்கள் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan), ஆர்.ஜே.பாலாஜி, ஸ்வாசிகா (Swasika), ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது தயாராகி கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலான நிலையில், வரும் 2026ம் ஆண்டு மே 14ம் தேதியில் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்.பாலாஜி, கருப்பு திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் இறுதி கிளைமேக்ஸ் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.




இதையும் படிங்க : ரசிகர்களுக்கு ஷாக் தகவல்… ஜன நாயகன் படத்தில் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் – சென்சார் குழு அதிரடி!
சூர்யாவின் கருப்பு பட கிளைமேக்ஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்த விஷயம்:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், “நான் சிறுவயதிலே படையப்பா, முத்து மற்றும் பாட்ஷா போன்ற படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். அந்த விதத்தில் சூர்யாவின் கருப்பு படத்தில் ஒரு வலுவான தொடக்கம் இருக்கும், ஜாலியான இண்டர்வெல் சண்டை மற்றும் பவர்ஃபுல்லான கிளைமேக்ஸ் இருக்கிறது. இந்த படம் ஒரு பெரிய ஹீரோ படம் என்பதால், ஹீரோ நடனமாடவேண்டும், சிரிக்கவைக்கவேண்டும், காமெடி பண்ணனும், சண்டை போடணும், சவால் விடும் வில்லன்களுக்கு பதிலளிக்கவேண்டும் என நான் விரும்பினேன்.
இதையும் படிங்க: வீடியோ பாடலின் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரபு தேவாவின் மகன்!
சூர்யா சாரை போல ஒரு பெரிய ஸ்டார், அவரின் பிரசென்ஸ் மற்றும் திறமை எனது காரியங்களை எளிதாக்கியது. ஆர்.ஜே.பாலாஜியின் பாணியில் ஒரு பிக் ஹீரோவின் படமாக இருக்கும். இது சூர்யா சார் படம் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட பதிவு:
#Karuppu – 14-05-2026🧨🧨
Blockbuster summer begins !!! 🔥🔥 pic.twitter.com/kebfioJ3Rs— RJ Balaji (@RJ_Balaji) March 18, 2026
ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பிலும், இயக்கத்திலும் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சூர்யாவின் கருப்பு படம் தெய்வீகம், நீதி மற்றும் அதிரடி ஆக்ஷன் போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், நிச்சயமாக சூப்பர் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.