AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எனது ஆதரவு விஜய்க்குதான்.. த.வெ.க.வில் இணைகிறேனா? – பிரபல நடிகை பேச்சு!

Vani Bhojan About Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் சீரியல் நடிகையாக நுழைந்து, தற்போது சினிமாவிலும் தொடர்ந்து படங்களில் பல நடிகைகள் நடிக்கிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான நடிகையாக இருப்பவர்தான் வாணி போஜன். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், தேர்தலில் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Mar 2026 18:48 PM IST
தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் நடிகையாக ஆரம்பத்தில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவர் 2012ம் ஆண்டில் வெளியான ஆஹா என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிகையாக நுழைந்தார். இந்த தொடரில் இவரின் கதாபாத்திரம் பேசியதாக பேசப்படவில்லை. இதையடுத்து மாயா என்ற தொடரிலும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

1 / 5
அந்த வகையில் இவருக்கு மக்கள் மத்தியதில் மிகுந்த பிரபலத்தை கொடுத்த சீரியல்தான் தெய்வமகள். கடந்த 2013ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல், கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து லட்சுமி வந்தாச்சு மற்றும் பிரேமா போன்ற தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

2 / 5
இவ்வாறு தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துவந்த இவருக்க்கு, தமிழில் முதல் படமாக அமைந்தது. ஓ மை கடவுளே. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், வெளியான இதில் வித்தியாசமான வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதையடுத்து லாக்கப், மகான், மிரல், லவ் மற்றும் கேங்கர்ஸ் போன்ற படங்களில் நடித்துவந்தார்.

3 / 5
தற்போது இவர் அதர்வா, ரெட்டை வேடத்தில் நடித்துவரும் வலை என்ற படத்தில் லீட் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த படமானது முழுக்க கடல் சார்ந்த கதைகளத்த்தில் அமைந்துள்ளது. அந்த விதத்தில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன், சட்டமன்ற தேர்தலில் தளபதி விஜய் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

4 / 5
வாணி போஜன் பேசுகையில், எனக்கு விஜய்யுடன் இணைந்து நடிப்பதற்கு ஆசை. ஆனால் அதற்கு அவர் நடிக்கவேண்டும். மேலும் அரசியலில் அவர் இறங்கியது குறித்து பேசிய அவர், விஜய் எனக்கு ரொம்பவே பிடிக்கும், அவர் அரசியல் வந்திருப்பதால் மிகவும் சந்தோசம். எல்லாருமே என்னிடம் நீங்க TVK -வில் எப்போது இணைகிறீர்கள் என கேட்கிறார்கள். எனக்கு எண்ணம் இருக்கிறதா என பிறகு சொல்கிறேன். என்னுடைய ஆதரவு விஜய்க்குதான் என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

5 / 5
Follow Us