AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mari Selvaraj: தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி பட நிலை என்ன? தள்ளிப்போக இதுதான் காரணமா?

Dhanush And Mari Selvaraj Movie Update: கோலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் தொடர்ந்து படங்களை கொடுத்துவருபவர் மாரி செல்வராஜ். இவர் மற்றும் தனுஷ் கூட்டணியில் டி56 படம் உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதை தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். அந்த வகையில் இவர்களின் கூட்டணி படத்தின் நிலை குறித்து பார்க்கலாம்.

Mari Selvaraj: தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி பட நிலை என்ன? தள்ளிப்போக இதுதான் காரணமா?
தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் படம் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Mar 2026 18:02 PM IST

இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில், தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஸ்டோரியில் புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் பைசன் (Bison). இந்த படத்தில் நடிகர் துருவ் விக்ரம் லீட் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், கடந்த 2025 ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இந்த படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்தக்க இவர் தனுஷ் (Dhanush) கூட்டணி படத்திற்காக பணியாற்றிவருகிறார். இவர் மற்றும் தனுஷ் இணையும் படம் டி56 என அழைக்கப்பட்ட நிலையில், தற்போது தனுஷின் 56வது படத்தை லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ளார். அந்த விதத்தில் தற்போது ப்ரீ- ப்ரொடக்ஷன் பணியில் மாரி செல்வராஜ் தீவிரமாக இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஹேப்பி ராஜ் (Happy Raj) படத்தை அவர் பார்த்துள்ளார். அந்த விதத்தில் இந்த திரைப்படத்தை பாராட்டும் விதத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விதத்தில் இவர் மற்றும் தனுஷுடன் இணையும் படத்தின் நிலை என்ன என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: விஜய் சார் படம் ரிலீஸாகுதுனா எங்க படத்தை திட்டமிடமாட்டோம் – நடிகர் பரத்

தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி திரைப்படத்தின் நிலை என்ன:

தனுஷ் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் டி55 படத்தில் நடித்துவருகிறார். இந்த படமானது முழுக்க ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இந்த படத்தை அடுத்தாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணைவதாக கூறப்பட்ட நிலையில், ளப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் இணைகிறார். அந்த விதத்தில் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணி படம் தள்ளிபோகிறதாம்.

இதையும் படிங்க: கர படத்திற்காக தனுஷ் சார் சொன்ன விஷயம்.. நான் பிரம்மித்துபோனேன்- இயக்குநர் விக்னேஷ் ராஜா!

இதை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், பேண்டஸி வரலாற்று படமாக தயாராகவுள்ளதாம். அதனால் இப்படத்திற்கு பல நாட்கள் கால்ஷீட் தேவைப்படும் நிலையில், தனுஷ் குறைவான நாள் கொடுத்த படங்களை முடித்துவிட்டு, மீண்டும் மாரி செல்வராஜ் கூட்டணி படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. கர்ணன் படத்திற்கு பின் 2வது முறை இந்த கூட்டணி இணையும் நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 ஹேப்பி ராஜ் படத்தை பாராட்டி மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவு:

அந்த பதிவில் இயக்குநர் மாரி செல்வராஜ், ஹேப்பி ராஜ் படத்தின் கதை, இயக்குநர், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஜார்ஜ் மரியான் போன்றவர்களை பாராட்டி பேசியுள்ளார். மேலும் இந்த படம் வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டுமில்லாமல், எண்ணத்தை உடைத்து நொறுக்கிய உணர்ச்சிமிக்க படைப்பாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us