AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vignesh Shivan: துப்பாக்கியில் விஜய் சார் சுட்டது 12 பேர்.. ஆனால் 13வது சுடப்பட்டவன் நான்- விக்னேஷ் சிவன்!

Vignesh Shivan About Poda Podi And Thuppakki Clash: விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் LIK என்ற படமானது விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த விக்னேஷ் சிவன், தளபதி விஜய் படத்துடன் போடா போடி படம் மோதியது குறித்து தெரிவித்துள்ளார்.

Vignesh Shivan: துப்பாக்கியில் விஜய் சார் சுட்டது 12 பேர்.. ஆனால் 13வது சுடப்பட்டவன் நான்- விக்னேஷ் சிவன்!
விக்னேஷ் சிவன் மற்றும் தளபதி விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 05 Apr 2026 17:08 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் இருவராக இருந்துவருபவர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan). இவர் நடிகை நயன்தாராவின் (Nayanthara) கணவரும் ஆவார். இவரின் இயக்கத்தில் தமிழில் இதுவரை 4 படங்கள் மட்டுமே வெளியாகியிலிருந்தாலும், அனைத்தும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் 5வது படமாக வெளியாக தயாராகியுள்ளதுதான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) மற்றும் கிரித்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த படமானது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தயாராகிவந்த நிலையில், வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது முதல் படம் போடி படம், தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) துப்பாக்கி திரைப்படத்துடன் (Thuppakki) மோதிய சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  அதன் தாக்கம்.. கனத்த இதயத்துடன் பல படங்களை நிராகரித்தேன் – மிருணாள் தாக்கூர்!

துப்பாக்கி படத்துடன் போடா போடி படம் மோதியது குறித்து விக்னேஷ் சிவன் பகிர்ந்த சம்பவம்:

அந்த நேர்காணலில் விக்னேஷ் சிவன் பேசுகையில், “போடா போடி படம் மீண்டும் மீண்டும் ரிலீஸ் தாமதமானது. அதன் காரணமாக இறுதியில் விஜய் சாரின் துப்பாக்கி என்ற மெகா பிளாக்பஸ்டர் படத்திற்குப் போட்டியாக வெளியானது. அங்காயே எல்லாம் முடிஞ்சிடிச்சி. துப்பாக்கி பட இடைவேளையில், விஜய் சார் 12 பேரைச் சுட்டாரு.

இதையும் படிங்க: நான் இந்த நிலைமையில் இருக்க தனுஷ் சார்தான் காரணம்.. அவரின் நட்பை இழந்ததற்கு வெட்கப்படுகிறேன் – விக்னேஷ் சிவன் பேச்சு!

ஆனால் உண்மையில் 13 பேர், அந்த 13வது நபர் நான்தான். அதோடு என் கதை முடிந்துவிட்டது. அதன் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் பெரிதாக எதுவும் வரவில்லை. யாரும் என் அழைப்புகளை ஏற்கவில்லை, நான் தவித்துப்போனேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்த விக்னேஷ் சிவன்:

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இயக்குநர் விக்னேஷ் சிவனின் முதல் படம் சிலம்பரசனின் நடிப்பில் போடா போடி படம் அமைந்தது. இந்த படமானது கடந்த 2012ம் ஆண்டில் தயாராகிய, சிலம்பரசன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் 2012ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டுநவம்பர் 13ம் தேதியில் வெளியானது. அதே தேதியில்தான் தளபதி விஜய்யின் துப்பாக்கி திரைப்படமும் வெளியானது. அதன் காரணமாக விக்னேஷ் சிவனின் முதல் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

Follow Us