Vignesh Shivan: நான் இந்த நிலைமையில் இருக்க தனுஷ் சார்தான் காரணம்.. அவரின் நட்பை இழந்ததற்கு வெட்கப்படுகிறேன் – விக்னேஷ் சிவன் பேச்சு!
Vignesh Shivan About Dhanush Friendship: பிரபலமான இயக்குநராகவும், நடிகை நயன்தாராவின் கணவராகவும் இருந்துவருபவர் விக்னேஷ் சிவன். இவரின் LIK படமானது விரைவில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அவர், தனுஷின் நட்பை இழந்தது குறித்து எமோஷனலாக பேசியுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) தமிழ் சினிமாவில் பிரபலமான ஒருவராக இருந்துவருகிறார். இவர் கடந்த 2012ம் ஆண்டில் சிலம்பரசனின் நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குநராக சினிமாவில் நுழைந்தார். இதையடுத்து நானும் ரௌடிதான், காத்துவக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போதும் திரைப்படங்களை இயக்கிவருகிறார். இவர் இயக்கத்தில் வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இதில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan), க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty), எஸ்.ஜே.சூர்யா மற்றும் சீமான் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது படத்தின் புரோமோஷன் பணிகள் முழு மூச்சாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விக்னேஷ் சிவன், தனுஷின் (Dhanush) நட்பை இழந்தது பற்றியும், தங்களுக்குள் இருக்கும் எமோஷனல் இணைப்பு குறித்தும் பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவின் பர்த்டே.. ஸ்பெஷல் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ரணபாலி படக்குழு!
தனுஷின் நட்பை இழந்தது குறித்து எமோஷ்னலா பேசிய விக்னேஷ் சிவன்:
அந்த நேர்காணலில் விக்னேஷ் சிவன் பேசுகையில், “எனக்கு தனுஷ் சாரை, ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவரை ஒரு நடிகரை விடவும் எனது வாழ்க்கையில் மேலானவராக பார்க்கிறேன். அவரின் பிறந்தநாளை ஜூலை 28, எனது அப்பா இறந்த தேடியும் ஜூலை 28 தன. அதனால் அவரை எனது அப்பாவைப்போலவும், அவருக்குள் எனது அப்பா இருப்பதுபோல நான் பீல் பண்ணுறேன். நமக்கே தெரியாமல், சில நபர்களிடையே ஏதோஒரு பிரச்சனை வந்துவிடும். அந்த விதத்தில் தனுஷ் சாருடன் எனக்கு இருந்த பிரச்சனையும் அப்படித்தான்.
இதையும் படிங்க: ஹாய் படத்தில் முதல் காட்சியே அதுதான்.. கவினிடம் நயன்தாரா கேட்ட கேள்வி? – இயக்குநர் விஷ்ணு எடவன் பேச்சு!
அவருடன் நட்பு முறிந்தது, நான் ஒரு பெரிய இழப்பாக நினைக்கிறேன். அதுபோல் ஒரு நல்ல உறவு நிலையில் இருப்பவர்களை இழப்பது, ஒரு வெட்கப்படவேண்டிய விஷயமாகவும் நான் நினைக்கிறேன். அது நான் எங்கோ செய்த தவறாக நினைக்கிறேன். நான் இப்போது இந்த நிலையில் இருக்க, 100 சதவீதம் தனுஷ் சார் காரணம். அவருடன் விஐபி படத்திற்காக கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் பயணித்திருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசிய வீடியோ பதிவு:
#VigneshShivan Recent
– I like #Dhanush sir very much. His birthday is on July 28, the same day my dad passed away.
– I always feel my dad’s presence through D sir. I feel ashamed that I lost D sir’s friendship. Something must have gone wrong.#LIKpic.twitter.com/9B3uf0zt84— Movie Tamil (@_MovieTamil) April 5, 2026
கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக தனுஷ், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மூவருக்குள்ளும் சில பிரச்சனைகள் இருந்துவருகிறது. நயன்தாராவின் திருமண வீடியோ பகிர்வில், தனுஷ் தயாரித்திருந்த நானும் ரௌடிதான் பட காட்சிகள் பகிரப்பட்டதை தொடர்ந்து, தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரிடையேயும் பிரச்சனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.