AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AA22 Movie: அட்லீ – அல்லு அர்ஜுனின் AA22xA6.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Allu Arjun AA22xA6 Movie Update: இயக்குநர் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுனின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் திரைப்படம்தான் AA22xA6. இப்படமானது அதிக பட்ஜெட்டில் தயாராகிவரும் நிலையில், இப்படத்தும் குறித்த முக்கிய எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

AA22 Movie: அட்லீ – அல்லு அர்ஜுனின் AA22xA6.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Apr 2026 20:33 PM IST

தமிழ் பிரபல இயக்குநர் அட்லீ குமார் (Atlee Kumar), தற்போது இந்தி மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளை படங்களை இயக்க தொடங்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான ஜவான் (Jawan) படமானது பிரம்மாண்ட ஹிட்டை கொடுத்திருந்தது. இதை தொடர்ந்து இவர், அல்லு அர்ஜூனுடன் (Allu Arjun) இணைந்துள்ள புது திரைப்படம்தான் AA22xA6 . இப்படமானது கடந்த 2025ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக தயாராகிவருகிறது. இப்படமானது ஹாலிவுட் படங்களின் தரத்தில் தயாராகிவரும் நிலையில், இதில் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone) லீட் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துவருகிறது. இந்த படத்திற்காக இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துவருவதாக கூறப்படுகிறது.

இப்படம் 2025ம் ஆண்டு அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், 2026ம் ஆண்டில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பான அப்டேட் வெளியாகும் என கூறப்பட்டுவந்தது. அந்த வகையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தனுஷின் ‘கர’ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – அப்டேட் இதோ!

அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயின் AA22xA6 படம் குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட் பதிவு:

அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயின் AA22xA6 பட ரிலீஸ் எப்போது இருக்கும்:

அல்லு அர்ஜுனின் AA22xA6 திரைப்படத்தின் முக்கியமான அப்டேட், 2026 ஏப்ரல் 7ம் தேதியில் காலை 11 மணியளவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 2026 ஏப்ரல் 8ம் தேதியில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை என்பதால், அன்று இப்படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்த அப்டேட் நாளை வெளியாகுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இந்த AA22xA6 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கிட்டத்தட்ட 4 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இவருடன் தற்போது தீபிகா படுகோன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மேலும் நடிகர்கள் ராஷ்மிகா, மிருணாள் தாக்கூர் போன்ற நடிகைகளும் மிக முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஷ்ணு விஷால் – மமிதா பைஜுவின் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை மையமாக கொண்ட, பான் இந்திய படமாக தயாராகிவருகிறது. இப்படமானது பேண்டஸி ஆக்ஷன் திரில்லர் கதையில் தயாராகிவரும் நிலையில், நடிகை தீபிகா படுகோன் லீட் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படமானது வரும் 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாம். இது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us