AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வித் லவ் படத்திற்காக அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்துப் பாராட்டிய விஜய் தேவரகொண்டா

Vijay Deverakonda Wished Abishan Jeevinth: இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ள வித் லவ் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதற்காக அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து நடிகர் விஜய் தேவரகொண்டா பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வித் லவ் படத்திற்காக அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்துப் பாராட்டிய விஜய் தேவரகொண்டா
அபிஷன் ஜீவிந்த் மற்றும் விஜய் தேவரகொண்டாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Feb 2026 22:25 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் தற்போது இந்த வழக்கம் அதிகமாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் ஒரு அறிமுக நடிகரின் படம் அல்லது சின்ன சின்னப் படங்கள் சிறப்பாக உள்ளது என்றால் அந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்களை உச்ச நடிகர்களாக இருப்பவர்களும் திரையுலகில் பிரபலங்களாக இருப்பவர்களும் நேரில் அழைத்து தங்களது வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். இது தற்போது சினிமாவில் அதிக அளவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அந்த நடிகர் அல்லது படக்குழுவினர் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்தை தற்போது விஜய் தேவரகொண்டா நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

அதன்படி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனா அபிஷன் ஜீவிந்த் தற்போது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் வித் லவ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்துப் பாராட்டிய விஜய் தேவரகொண்டா:

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வித் லவ் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா அபிஷன் ஜீவிந்தை வித் லவ் படத்திற்காக நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்துடன் அபிஷன் ஜீவிந்த் தனது எக்ஸ் தள பக்கத்ஹ்டில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அபிஷன் ஜீவிந்த் கூறியுள்ளதாவது, வித் லவ் உடன் விஜய் தேவரகொண்டா அண்ணா. இன்றைய நாளிற்காக உங்களுக்கு மிக்க நன்றி, அண்ணா.  உங்களுடனா உறையாடல் உண்மையாகவே மிகச்சிறப்பாக இருந்தது. உங்களிடமிருந்து வந்த பாராட்டுகளையும் அன்பான வார்த்தைகளையும் கேட்டது எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. உண்மையிலேயே நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்… வைரலாகும் அப்டேட்

அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மை லார்ட் முதல் பூக்கி வரை… நாளை 13-ம் தேதி பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

Follow Us