Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இதயங்களை வென்ற படம்… 10 ஆண்டுகளை நிறைவு செய்த விசாரணை படத்தைப் புகழ்ந்து பதிவிட்ட தனுஷ்!

10 Years Of Visaranai Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிறுவனத்தின் கீழ் தயாரித்த படமான விசாரணை தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதயங்களை வென்ற படம்… 10 ஆண்டுகளை நிறைவு செய்த விசாரணை படத்தைப் புகழ்ந்து பதிவிட்ட தனுஷ்!
தனுஷ்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Feb 2026 23:14 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் தனுஷ். இவர் நாயகனாக நடிக்கும் படங்கள் மட்டும் இன்றி தயாரிக்கும் படங்களும் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியான விசாரணை படம் தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி உள்ளார். க்ரைம் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த விசாரணை படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் உடன் இணைந்து வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் ஃபில்ம் கம்பெனியும் தயாரித்து இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார்.

மேலும் இவருடன் இணைந்து நடிகர்கள் முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர், இ.ராம்தாஸ், அஜய் கோஷ், ஆனந்தி, சிலம்பரசன் ரத்தினசாமி, பிரதீஷ் ராஜ், மிஷா கோஷல், சரவண சுப்பையா, ஹல்வா வாசு, மூணார் ரமேஷ், தயா செந்தில், வேட்டை முத்துக்குமார், சேரன் ராஜ், சூப்பர் சுப்ரமணி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் எழுத்தாளர் எம். சந்திரகுமார் எழுதிய லாக் அப் என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. ஆந்திர மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்றவர்களை பொய்யான வழக்கைப் போட்டு விசாரணை என்ற பெயரில் அவர்களை கொடுமை செய்வதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தது. தொடர்ந்து லக்கப் மரணம் மற்றும் லாக் அப் கொடூரங்கள் இந்த நாட்டில் நடந்துவரும் நிலையில் படம் மக்களிடையே கவனத்தை ஈர்த்தது.

விசாரணை படத்தைப் புகழ்ந்து பதிவிட்ட தனுஷ்:

இந்த நிலையில் விசாரணை படம் திரையரங்குகளில் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடிகர் தனுஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த எக்ஸ் தள பதிவில் தனுஷ் கூறியுள்ளதாவது, 10 வருட விசாரணை – இதயங்களை வென்ற படம், வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கிராஸ்ரூட் திரைப்பட நிறுவனத்தின் ரத்தினம் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… காதலா? கெரியரா? நீங்க எதை தேர்ந்தெடுப்பீங்க… முதல் நீ முடிவும் நீ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

நடிகர் தனுஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம் – வைரலாகும் தகவல்