AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அர்ஜுன் மற்றும் முகுந்தன் நடிக்கும் புது பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? அறிவிப்பு இதோ!

AGS28 First Look Update: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் அர்ஜுன் சர்ஜா. இவரின் நடிப்பில் தமிழில் உருவாகிவரும் புதுப்படம்தான் தற்காலிகமாக ஏஜிஎஸ்28 என அழைக்கப்பட்டுவருகிறது. தற்போது இப்படத்தின் முதல் பார்வை எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அர்ஜுன் மற்றும் முகுந்தன் நடிக்கும் புது பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? அறிவிப்பு இதோ!
ஏஜிஎஸ்28 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Apr 2026 19:57 PM IST

தெலுங்கு சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் அர்ஜுன் சர்ஜா (Arjun Sarja). இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழில் படங்கள் வெளியாகிவருகிறது. மேலும் இவர் இயக்குநராகவும் திரைப்படங்களை இயக்கிவருகிறார். அந்த வகையில் தமிழில் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் தீயவர் குலை நடுங்க (Theeyavar Kulai Nadunga). இந்த படத்தில் அர்ஜுன் லீட் நாயகனாக நடிக்க, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நாயகியாக நடித்திருந்தார். க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வரிசையில், அர்ஜுன் சீதா பயணம் என்ற படத்தை இயக்கியிருந்தார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. அந்த வகையில் இப்படத்தை அடுத்ததாக ஏஜிஎஸ் எண்டெர்டெயிமென்ட் நிறுவனத்தின் கீழ் இவர் நடித்துவந்த திரைப்படம்தான் ஏஜிஎஸ்28 (AGS28).

இப்படம் தற்காலிகமாக ஏஜிஎஸ்28 என அழைக்கப்பட்டுவருகிறது. அதிரடி ஆக்ஷன் மற்றும் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், இதன் முதல் பார்வை எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை 2026 ஏப்ரல் 25ம் தேதி, காலை 11 மணியளவில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏக்கம்தான் ஆனால்.. அஜித் சாருடன் படம் இயக்க முடியாமல்போனது – இயக்குநர் விக்னேஷ் சிவன் பேச்சு!

அர்ஜுனின் ஏஜிஎஸ்28 படத்தின் முதல் பார்வை ரிலீஸ் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

இந்த ஏஜிஎஸ்28 படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கிவருகிறார். இவர் ஏற்கனவே பிரதீப் ரங்கநாதனுடன் லவ் டுடே படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஏஜிஎஸ்28 படத்தில் நடிகர் அர்ஜுன் லீட் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகர்கள் ஜான் கொக்கின், அர்ஜுன் சிதம்பரம் என பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: அஜித்தின் ஓட்டு செல்லுமா?.. கிளம்பிய சர்ச்சை.. தேர்தல் ஆணையம் அதிரடி விசாரணை!

இப்படத்தை ஏஜி எஸ் எண்டெர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் ரவி பஸ்ரூ இசையமைத்துவருகிறார். இவர் ஏற்கனவே கேஜிஎஃப் பார் 1 & 2 மற்றும் டாக்ஸிக் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது முழுக்க பேமிலி பொழுதுபோக்கு மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் மே இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us