AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… 26-வது திருமண நாளை கொண்டாடும் அஜித் குமார் – ஷாலினி

Ajith Kumar and Shalini Wedding Anniversary: தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகை ஷாலினி அஜித் குமார் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு திருமணமாகி தற்போது 26 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… 26-வது திருமண நாளை கொண்டாடும் அஜித் குமார் – ஷாலினி
அஜித் குமார் - ஷாலினிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Apr 2026 11:36 AM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய சினிமா அளவில் தொடர்ந்து நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொள்வது காலம் காலமாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து பிரபலங்களுக்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர்கள் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி. அஜித் குமார் குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் தான் நடித்து இருந்தாலும் நாயகனாக பலப் படங்களில் நடித்து கலக்கி உள்ளார். மேலும் நடிகை ஷாலினி நாயகியாக குறைவான அளவில் படங்களில் நடித்து இருந்தாலும் அவர் குழந்தை நட்சத்திரமாக பான் இந்திய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார். குழந்தை நட்சத்திரமாகவே அவர் உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் நாயகியாக குறைவான படங்களிலேயே நடித்து உள்ளார். இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் இணைந்து அமர்களம் படத்தில் நடித்தனர். இந்தப் படத்தில் நடித்த போதே இவர்கள் இருவரும் இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து காதலித்து வந்த இவர்கள் இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

26-வது திருமண நாளை கொண்டாடும் அஜித் குமார் – ஷாலினி:

அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த தம்பதி சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் தம்பதிகளாக உள்ளனர். மேலும் திருமணம் ஆகி தற்போது 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு அவர்களின் ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவம் இணைந்து நடித்த அமர்களம் படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்துள்ளது ரசிகர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… Actor Ajithkumar: வெள்ளை நிற கோட் சூட்.. முதல் ஆளாக ஓட்டு போட வந்த நடிகர் அஜித்!

நடிகை ஷாலினி அஜித் குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… தமிழகத்தில் ஜன நாயகக் கடமையை ஆற்றிய உச்ச நடிகர்கள்… யார் யார் என்று தெரியுமா?

Follow Us