AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த படத்திற்கு பிறகு என்னை பல மொழிகளில் நடிக்க அழைத்தார்கள் – சாண்டி ஓபன் டாக்

Sandy Master Recent Interview | தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் சாண்டி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனக்கு பல மொழிகளில் வாய்ப்பு கிடைக்க என்ன காரணம் என்பது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

அந்த படத்திற்கு பிறகு என்னை பல மொழிகளில் நடிக்க அழைத்தார்கள் – சாண்டி ஓபன் டாக்
சாண்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Aug 2026 19:26 PM IST

சின்னத்திரை நட நிகழ்ச்சிகளில் டான்ஸ்ராக இருந்த சாண்டி பிறகு நடன இயக்குநராக பணியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் நடன இயக்குநராக தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வந்த நடிகர் சாண்டி பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பிறகு தமிழக மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வந்தார். தொடர்ந்து இவர் படங்களில் நடன இயக்குநராக மட்டும் இல்லாமல் நடித்தும் வந்தார். அதன்படி தொடர்ந்து படங்களில் நடிகராக ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் சாண்டியின் சினிமா வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றியது லியோ படம். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த நிலையில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்தார்.

மேலும் இந்தப் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு மிரட்டலான வில்லன் தோற்றத்தில் தோன்றி ரசிகர்களிடையே பயத்தை காட்டினார் சாண்டி. அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சாண்டிக்கு மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நடிக்க அடுத்தடுத்து பல வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

அந்த படத்திற்கு பிறகு என்னை பல மொழிகளில் நடிக்க அழைத்தார்கள்:

இந்த நிலையில் சாண்டி மாஸ்டர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, ‘லியோ’ படத்தில் நான் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரம் பிரபலமடைந்த பிறகு, எல்லா இடங்களிலும் மக்கள் என்னைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். கன்னடம், மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தன. இப்போது நான் முழுநேரமாக நடிப்பில் ஈடுபட்டு வருகிறேன். நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அழைப்புகள் வருகின்றன, ஆனால் அதற்கான நேரம் என்னிடம் இல்லை. என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது; மூச்சுவிடக் கூட நேரமில்லாத அளவுக்கு நான் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறேன். நான் சந்தித்த போராட்டங்களும் அவமானங்களும் என்னை முதிர்ச்சியடையச் செய்துள்ளன.

Also Read… ராம் அண்ட் லீலா முதல் மொத ராத்திரி வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இறுதிக்கட்டத்தை எட்டிய குக் வித் கோமாளி சீசன் 7.. கிராண்ட் பைனல் எப்போது தெரியுமா?

Follow Us