AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓரம் போ படத்தின் நாயகியாக அந்த நடிகைதான் முதல் சாய்ஸ் – இயக்குநர்கள் ஓபன் டாக்

Directors Pushkar And Gayathri recent interview | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களாக வலம் வருபவர்கள் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. இவர்கள் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் ஓரம் போ படம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைர்லாஅகி வருகின்றது.

ஓரம் போ படத்தின் நாயகியாக அந்த நடிகைதான் முதல் சாய்ஸ் – இயக்குநர்கள் ஓபன் டாக்
ஓரம் போImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Aug 2026 08:33 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த 30ம் தேதி நவம்பர் மாதம் 2007-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஓரம் போ. டார்க் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி எழுதி இயக்கி இருந்தனர். இவர்கள் இருவரும் கணவன் மனைவி ஆவர். மேலும் இந்தப் படத்தின் மூலமாக அவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குநர்களாக அறிமுகம் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை பூஜா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

அதன்படி நடிகர்கள் லால், ஜான் விஜய், ருத்ரா, ஜெகன், தம்பி ராமையா, நெல்லை சிவா என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படத்தை போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் சமீபத்தில் அளித்தப் பேட்டியில் ஓரம் போ படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஓரம் போ படத்தின் நாயகியாக அந்த நடிகைதான் முதல் சாய்ஸ்:

ஓரம் போ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் நயன்தாராவையே தாங்கள் தேர்வு செய்திருந்ததாக இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அக்காலகட்டத்தில் இருந்த பட்ஜெட் கட்டுப்பாடுகள் காரணமாக நயன்தாராவால் இப்படத்தில் இணைய முடியவில்லை; அதனால் இறுதியில் பூஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார். மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சண்டைப்பயிற்சி இயக்குநர் திலீப் சுப்பராயன் மற்றும் ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம் ஆகியோர் ‘ஓரம் போ’ படத்தில் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றினர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஹலிதா ஷமீமை அந்த இயக்குநர்கள் இருவருக்கும் ஆர்யா (Arya) தான் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

Also Read… ஆர்.ஜே.பாலாஜி அடுத்து நாயகனாக நடிப்பது இவரின் இயக்கத்திலா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… என் மகன்கள் சினிமாவில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும் – நடிகர் நாகர்ஜுனா

Follow Us