அஜித் குமாரின் டேர் டெவில் படத்திலிருந்து விலகிய ஸ்ரீலீலா? வைரலாகும் தகவல்
Sreeleela opted out of Dare Devil movie | தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் டேர் டெவில். இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் படத்தில் இருந்து விலகியதாக வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீ லீலா. இவரது நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகா மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவெற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகை ஸ்ரீ லீலா தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் முன்னதாக வெளியான பராசக்தி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீலீலாவின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை ஸ்ரீ லீலா தற்போது நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து வரும் ஓம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து அவர் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து டேர்டெவில் படத்தில் நடிப்பதகாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.




அஜித் குமாரின் டேர் டெவில் படத்திலிருந்து விலகிய ஸ்ரீலீலா?
இளம் நடிகையான ஸ்ரீலீலா, ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்பே அஜித் குமாரின் ‘டேர் டெவில்’ (Dare Devil) படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பல மாதங்கள் காத்திருந்தும், தனது பிற படங்களின் படப்பிடிப்புத் தேதிகளுடன் (call-sheet) மோதல் ஏற்பட்டதால், இப்படம் குறித்த தேதிகளை அவரால் ஒதுக்க முடியவில்லை என்று தெரிகிறது.
தற்போதைய நிலையில், ஸ்ரீலீலா தனது முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாகவும், இப்படத்தில் தொடர்ந்து நடிப்பாரா என்பது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, ‘டேர் டெவில்’ படத்திலிருந்து ஸ்ரீலீலா விலகுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… வசூலில் 80 கோடியைக் கடந்தது இறுமுடி படம்… வைரலாகும் ஜிவி பிரகாஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Sreeleela Opted Out of #DareDevil? 👀
Young actress Sree leela had reportedly committed to #AjithKumar‘s Dare Devil nearly a year ago.
However, after waiting for several months, she has reportedly been unable to allot dates to the project due to call-sheet clashes with her… pic.twitter.com/8YgH07N5iK
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) August 24, 2026
Also Read… தர்மன் பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ