IPL 2027: இனி முழுநேர பயிற்சியாளர்.. ஐபிஎல் 2027 சீசனில் களமிறங்கும் யுவராஜ் சிங்!
Yuvraj Singh IPL Coach: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஐபிஎல் 2026 சீசன் மிகவும் ஏமாற்றமளித்தது. இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, தனது 19வது சீசனை வலுவாகத் தொடங்கியது. ஆனால், அதன் பிறகு டெல்லி அணியின் செயல்திறன் படிப்படியாகச் சரிந்தது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 19வது சீசன் முடிந்து இன்னும் முழுமையான 4 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள், ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் அடுத்த ஐபிஎல் 2027 சீசனுக்கான தங்கள் அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கிவிட்டன. இதற்கிடையில், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் (Yuvraj Singh), 2027 ஐபிஎல் சீசனுக்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணையவிருப்பது குறித்து ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. யுவராஜ் சிங்குடன், இதற்கு முன்பு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணைப் பணியாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் இந்திய அணி கேப்டன் சௌரவ் கங்குலியும் மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: சிஎஸ்கே பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் எம்.எஸ்.தோனி.. நிராகரித்ததா சிஎஸ்கே நிர்வாகம்?
பயிற்சியாளர் குழுவில் வலுசேர்க்கும் டெல்லி:
பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி, ஐபிஎல்-இன் 20-வது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியை யுவராஜ் சிங் ஏற்கக்கூடும். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஃபிரான்சைஸ் லீக்கிலிருந்து விடைபெற்ற பிறகு, 44 வயதான யுவராஜ் சிங், ஐபிஎல் 2026 சீசனில் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்ட அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கு நீண்ட காலமாக வழிகாட்டியாக இருந்து வருகிறார். யுவராஜ் சிங் முதல் முறையாக ஐபிஎல்-இன் பயிற்சியாளர் குழுவில் அதிகாரப்பூர்வமாக நுழையவுள்ளார்.




ALSO READ: பாலியல் வன்கொடுமை வழக்கால் சிக்கல்.. கைது செய்யப்பட்ட ஐபிஎல் வீரர்!
வெளியேறுகிறாரா தமிழ்நாடு பயிற்சியாளர்..?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஐபிஎல் 2026 சீசன் மிகவும் ஏமாற்றமளித்தது. இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, தனது 19வது சீசனை வலுவாகத் தொடங்கியது. ஆனால், அதன் பிறகு டெல்லி அணியின் செயல்திறன் படிப்படியாகச் சரிந்தது. லீக் சுற்று முடிந்த பிறகு, டெல்லி அணி ஐபிஎல் 2026 சீசனில் ஆடிய 14 போட்டிகளில் 7ல் மட்டுமே வெற்றி பெற்று 7ல் தோல்வியடைந்ததால், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினர். இதைத் தொடர்ந்து, கேப்டன் அக்சர் படேல் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் படானி ஆகியோர் எடுத்த பல முடிவுகளுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டனர். இதன் விளைவாக, யுவராஜ் சிங் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் அணியில் இணைவதால், வருகின்ற ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி அமைப்பில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகியுள்ளது. மேலும், டெல்லி அணியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.