AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

MS Dhoni: சிஎஸ்கே பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் எம்.எஸ்.தோனி.. நிராகரித்ததா சிஎஸ்கே நிர்வாகம்?

CSK - MS Dhoni: மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கு வாங்க விரும்புகிறார். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் 25 சதவீத பங்குகளைக் கோரினார். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க ஒப்புக்கொண்டது. மகேந்திர சிங் தோனி தனது கோரிக்கையை 20 சதவீதமாக உயர்த்தினார். ஆனால், சிஎஸ்கே நிர்வாகம் 4 சதவீதத்தில் உறுதியாக இருந்தது.

MS Dhoni: சிஎஸ்கே பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் எம்.எஸ்.தோனி.. நிராகரித்ததா சிஎஸ்கே நிர்வாகம்?
எம்.எஸ்.தோனிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Aug 2026 19:26 PM IST

ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) என்றாலே மகேந்திர சிங் தோனிதான். ஆனால், கடந்த ஐபிஎல் 2026 சீசனில் காயம் காரணமாக மகேந்திர சிங் தோனி விளையாடவில்லை. தற்போது, ​​தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார். இதுகுறித்து ஒரு ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றியின் உச்சிக்குக் கொண்டு செல்வதில் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) முக்கியப் பங்காற்றியுள்ளார். ஆனால், மகேந்திர சிங் தோனியின் ஒரு கோரிக்கையை ஏற்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தயாராக இல்லை. இதன் காரணமாக, எம்.எஸ். தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

ALSO READ: சிஎஸ்கேவின் அடுத்த பயிற்சியாளர் இவரா? மெக்கல்லத்தை வரவைக்க திட்டம்போடும் எம்.எஸ்.தோனி..!

கிடைத்த தகவல்களின்படி, மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கு வாங்க விரும்புகிறார். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் 25 சதவீத பங்குகளைக் கோரினார். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க ஒப்புக்கொண்டது. மகேந்திர சிங் தோனி தனது கோரிக்கையை 20 சதவீதமாக உயர்த்தினார். ஆனால், சிஎஸ்கே நிர்வாகம் 4 சதவீதத்தில் உறுதியாக இருந்தது. மகேந்திர சிங் தோனி 18 சதவீதப் பங்கு என்ற இறுதி நிபந்தனையை முன்வைத்தார். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முன்மொழிவை நிராகரித்து, தங்களுக்கு அதிகபட்சமாக 5.5 சதவீதப் பங்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்தது

தோனிக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இடையிலான பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் வாய்மொழியாகவே நடந்தன. மேலும், இரு தரப்பினருக்கும் இடையே முறையான எழுத்துப்பூர்வமான முன்மொழிவோ அல்லது ஒப்பந்தமோ எட்டப்படவில்லை. இந்தப் பங்கு குறித்த கருத்து வேறுபாடு, சிஎஸ்கே மற்றும் தோனி இடையேயான உறவைச் சீர்குலைத்துள்ளதாகவும், இதனால் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் விளையாடுவாரா என்பதில் உறுதியில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு, சிஎஸ்கே தோனியை ரூ. 4 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது. இருப்பினும், காயம் காரணமாக, 2026ம் ஆண்டு லீக் தொடரில் சிஎஸ்கே அணிக்க்கா ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை.

சிஎஸ்கே நிர்வாகம் பேச்சுவார்த்தை:

கிரிக்பிளாகர் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, இது தொடர்பாக மகேந்திர சிங் தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அடுத்த ஐபிஎல் 2027 சீசனில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருப்பாரா இல்லையா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

ALSO READ: கேப்டனாக சஞ்சு சாம்சன்… மென்டராக தோனி – பல்வேறு மாற்றங்களுடன் சொல்லி அடிக்க காத்திருக்கும் சிஎஸ்கே

மகேந்திர சிங் தோனி தலைமையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒன்று அல்லது இரண்டு அல்ல, ஐந்து பட்டங்களை வென்றுள்ளது. தோனி 2008 முதல் இந்த அணியை வழிநடத்தி வந்தார்.

Follow Us