AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக பலத்தை உயர்த்த காய் நகர்த்தல்.. அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி மாற வாய்ப்பு.. அமைச்சர் ஷாஜகான்!

Minister Shahjahan Latest Speech : அ. தி. மு. க. வை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தவெக பலத்தை உயர்த்த காய் நகர்த்தல்.. அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி மாற வாய்ப்பு.. அமைச்சர் ஷாஜகான்!
அமைச்சர் ஷாஜகான்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 19 Oct 2026 21:56 PM IST

அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாத ஆட்சி நடைபெறுகிறது.  இந்த ஆட்சி அமைந்த நிலையில், எதிர்க் கட்சிகள் தங்கள் எதிர்காலம் குறித்து கேள்விக்குறியோடு பயணித்து வருகின்றனர். பல்வேறு எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் இணைவதற்கு தயாராக உள்ளனர் என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் அதிமுக மீது அந்தக் கட்சியின் தொண்டர்கள் வைத்திருந்த மிகுந்த நம்பிக்கையை இழந்துள்ளனர். குறிப்பாக தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கோலோச்சிய நிலையில், இடைத்தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

தங்கள் உரிமையின் அடிப்படையில் தவெகவில் இணைவர்

இதனால், அந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வர வாய்ப்புள்ளது. இது ஜனநாயகம், சட்ட மரபு படி அவர்களுக்கான உரிமை படி பதவி விலகியோ, ராஜினாமா செய்தோ இணைவார்கள் என்று தெரிவித்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 118 என்ற பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இதற்கு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது.

மேலும் படிக்க: தவெக அரசை சீர்குலைக்க சதி… குண்டை தூக்கி போட்ட வைகோ.. அரசியலில் அடுத்த பரபரப்பு!

தவெகவில் இணைந்த 6 அதிமுக எம்எல்ஏக்கள்

அதன்படி, முதல்வர் விஜய்யின் தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் முன்மொழியப்பட்ட போது, அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது எடப்பாடி பழனிசாமி கட்சி தாவல் தடை சட்டத்தின் நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் புகார் மனு அளித்தார். இதை தொடர்ந்து, மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகிய 6 அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து வந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

எம்எல்ஏக்கள் பலத்தை உயர்த்த காய் நகர்த்தும் தவெக

இந்த நிகழ்வு முதல் தற்போது வரை அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மதுராந்தகம், தாராபுரத்தில் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதன் மூலம் தவெகவின் எம்எல்ஏக்கள் பலம் 109- ஆக உயர்ந்துள்ளது. இந்த பலத்தை மேலும் உயர்த்துவதற்கு தவெக காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: வெள்ள தடுப்பு ஆய்வறிக்கையில் உள்ள சூட்சமம்.. திமுக அரசு செய்யாததை தவெக அரசு செய்ய வேண்டும்.. பெ. சண்முகம்!

Follow Us