வடிவேலு ஸ்டைலில்… திருட வந்த இடத்தில் துணி துவைத்து குளித்து ஜாலியாக இருந்த திருடன் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
Showroom Thief Goes Viral : உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பைக் ஷோரூமில் நுழைந்த திருடன் அங்கு கிட்டத்தட்ட 4 மணி நேரம் தங்கி குளித்து, துணி வைத்து காபி குடித்து பின்னர் விலையுயர்ந்த பைக்கை திருடி சென்றுள்ளான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் வராணசியில் உள்ள பைக் ஷோரூமில் புகுந்த திருடன், கிட்டத்தட்ட 4 மணி நேரம் அங்கேயே தங்கி ஜாலியாக பொழுதை கழித்துவிட்டு, ரூ.4.71 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கேடிஎம் பைக்கை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பைக் ஷோரூமில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
காபி போட்டு குடித்த திருடன்
உத்தரப்பிரதேச மாநிலம் வராணசியில் பிரபல பைக் ஷோரூமுக்குள் நுழைந்த அந்த ஒருவர், உடனடியாக பைக்தை திருடி செல்லாமல் அங்கேயே தங்கி டான்ஸ் ஆடி திரிந்துள்ளார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஷோரூமில் இருந்த அவர், பயமோ, கவலையோ துளியும் இன்றி மிகவும் சாதாரணமாக அங்கும் இங்கும் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அவர் செய்த செயல்கள் அனைத்தும் ஷோரூமில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.




இதையும் படிக்க : குளத்துக்குள் வாழும் 16 வயது சிறுவன்.. அரிய வகை பிரச்னையால் 5 ஆண்டுகளாக அவதி.. சோக கதை!
மேலும் ஷோரூமுக்குள் இருந்தபோது அந்த நபர் தனக்காக காபி போட்டு குடித்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது உடைகளை துவைத்து அவற்றை காய வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, அவர் அங்கேயே குளிக்கவும் செய்திருக்கிறார். பொதுவாக திருடர்கள் திருடிவிட்டு யாரும் பார்க்காமல் அங்கிருந்து தப்பி செல்வார்கள். ஆனால் இந்த நபர் எந்த அவசரமும் இல்லாமல் நீண்ட நேரம் ஷோரூமுக்குள் இருந்தது சம்பவத்தை மேலும் வினோதமாக்கியுள்ளது.
‘லுங்கி டான்ஸ்’ பாடலுக்கு நடனம்
Varanasi: A thief spent 4 hours inside a bike agency, made coffee, took a bath, danced to music, and even dried his clothes before fleeing with the manager’s ₹4.70 lakh KTM bike😭💀 pic.twitter.com/6C5cdMOhnM
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 13, 2026
சிசிடிவி காட்சிகளில் அந்த நபர் பிரபல பாலிவுட் பாடலான ‘லுங்கி டான்ஸ்’ பாடலுக்கு ஷோரூமுக்குள் நடனமாடுவதும் பதிவாகியுள்ளது. இதனால் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. சுமார் 4 மணி நேரம் ஷோரூமுக்குள் இருந்த பிறகு, அங்கிருந்த ஷோரூம் மேனேஜரின் விலையுயர்ந்த கேடிஎம் பைக்கை அவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட கேடிஎம் பைக்கின் மதிப்பு சுமார் ரூ.4.71 லட்சம் என கூறப்படுகிறது. ஷோரூமில் இருந்த பைக்குகளில் இருந்து இந்த விலையுயர்ந்த பைக்கைத் தேர்வு செய்து அந்த நபர் திருடிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிக்க : ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு முயற்சி! இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..
போலீஸ் விசாரணை தீவிரம்
இந்த சம்பவம் தொடர்பாக வராணசி போலீசார் ஆகஸ்ட் 13, 2026 விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில வெளியிடப்பட்ட பதிவில், சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் கிடைத்துள்ள பிற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் திருடனை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.