AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : வீட்டின் கேட்டிற்குள் நுழைந்த ராட்சத மலைப்பாம்பு.. இணையத்தில் வைரலாகி வரும் பகீர் வீடியோ!

Giant Python Enters House Gate | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் ஒரு வீட்டின் கேட்டிற்குள் ராட்சத மலைப்பாம்பு நுழையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : வீட்டின் கேட்டிற்குள் நுழைந்த ராட்சத மலைப்பாம்பு.. இணையத்தில் வைரலாகி வரும் பகீர் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Aug 2026 14:00 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவ்வாறு வைரலாகும் வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) மலைப்பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீட்டின் கேட்டிற்குள் நுழைந்த ராட்சத மலைப்பாம்பு

பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் மிகவும் அரிதாகவே காணப்படும். வனப்பகுதி, புதர்கள் உள்ளிட்ட இடங்களில் தான் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். ஆனால், உத்தர பிரதேச மாநிலம், மீரட் பகுதியில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று சாலைகளில் ஊர்ந்து சென்றுள்ளது. அப்படியே அந்த பாம்பு அங்கிருந்த ஒரு வீட்டிற்கு நுழைந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : வடிவேலு ஸ்டைலில்… திருட வந்த இடத்தில் துணி துவைத்து குளித்து ஜாலியாக இருந்த திருடன் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு வீட்டின் கேட்டில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று நுழைய முயற்சி செய்கிறது. அதனை அந்த வீட்டில் இருக்கும் நபர் ஒருவர் தனது கையால் இறுக்கமாக பிடித்துக்கொண்டு இருக்கிறார். அந்த பாம்பு அவரின் கைகளில் இருந்து விலக முயற்சி செய்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : தம்பதியை கடித்து குதறிய பிட்புல் நாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அதிர்ச்சியுடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us