Viral Video : சாட்ஜிபிடியை உண்மையான பெண் என நினைத்து பேசிய மூதாட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Old Woman Speaks To ChatGPT, Trusted That As a Girl | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மூதாட்டி ஒருவர் சாட்ஜிபிடியை உண்மையான பெண் என நினைத்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களின் மூலம் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள், நிகழ்வுகள், மனிதர்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். இவ்வாறு இணையத்தில் வைரலாகும் ஒவ்வொரு விதமான வீடியோவும், ஒவ்வொரு கருத்துக்களையும், அனுபவத்தையும் கொடுக்கும். அந்த வகையில், மூதாட்டி ஒருவர் சாட்ஜிபிடி சாட்பாட்டை (ChatGPT Chatbot) உண்மையான மனிதர் என நினைத்து பேசுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாட்ஜிபிடியிடம் மனிதர் என நினைத்து பேசிய பாட்டி
தற்போதைய உலகம் முழுவதுமாக தொழில்நுட்பங்களால் நிறைந்துள்ளது. ஒரு கடையில் உணவு சாப்பிடுவது முதல், பேருந்தில் டிக்கெட் எடுப்பதை வரை என அன்றாட தேவைகள் அனைத்தும் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு இது மிகவும் சாதாரணமாக உள்ளது. ஆனால், இதுவே 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு பிறனதவர்களுக்கு இவை அனைத்தும் மிகவும் பிரம்மிக்க கூடிய ஒரு விஷயமாக உள்ளது. இந்த நிலையில் தான், மூதாட்டி ஒருவர் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை உண்மையான மனிதர் என நினைத்து பேசுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : காலாவதியான சாக்லேட், உணவு பொருட்கள்.. போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் அந்த மூதாட்டியின் பேத்தி, ஆஷுவுக்கு பெண் பார்த்திருக்கிறோம். அவர் வெளிநாட்டை சேர்ந்தவர், ஆனால் அவருக்கு ஹிந்தி தெரியும் என கூறுகிறார். அதனை நம்பிய அவர், போனை வாங்கி சாட்ஜிபிடியிடம் பேசுகிறார். அவர் அதனை ஒரு பெண் எனவே நினைத்து பேசுகிறார். இதனை பதிவு செய்து அவரது பேத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video: டிஜே இசையின் அதிர்வால் கடையில் இருந்த பொருட்கள் விழுந்த வைரல் வீடியோ.. இணையத்தில் ஏற்பட்ட விவாதம்
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், மிகவும் அப்பாவியான தலைமுறையினர்கள் இவர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.