Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சீரியல் ஆக்டர் டூ கோலிவுட் நாயகன்… இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா? இவர் 3 ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்!

Tamil Celebrity Childhood Photo: தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலர் இருந்துவருகின்றன. அதில் சீரியல்கள் மற்றும் துணை நடிகராக இருந்து கதாநாயகனாக அறிமுகமானவர்களும் உண்டு. அந்த வகையில் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என தெரிகிறதா?, இவர் சீரியல் நடிகராக இருந்து, தற்போது சினிமாவில் கதாநாயகனாக அசத்திவருகிறார். இவர் யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

சீரியல் ஆக்டர் டூ கோலிவுட் நாயகன்… இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா? இவர் 3 ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்!
தமிழ் நடிகர் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 02 Jan 2026 08:30 AM IST

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. அந்த வகையில் இயக்குநராக நுழைந்து படங்களை இயக்க ஆரம்பித்தவர்களும் கூட, தற்போது கதாநாயகனாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் சின்னத்திரையில் (Small Screen) மக்களிடையே பிரபலமான நடிகராக இருந்து, சினிமாவிலும் கதாநாயகனாக அறிமுகமானவர்கள் அதிகம். அதில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம். அந்த வகையில் மேலே இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா. இவரும் சிவகார்திகேயனைப்போல சின்னத்திரையில் இருந்து சினிமாவில் நுழைந்தவர்தான். இவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் (Karthik Subbaraj) பீட்ஸா (Pizza) படத்தின் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இப்படத்தை அடுத்து இன்று நேற்று நாளை (Inru Netru Naalai) மற்றும் சத்ரியன் போன்ற படங்களிலும் துணை வேடத்தில் நடித்திருந்தார்.

பின் கடந்த 2019ம் ஆண்டில் அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கியப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவருக்கு சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியலாக அமைந்தது சரவணண் மீனாட்சி (saravanan Meenatchi). இந்த சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார். இப்போதாவது இந்த சிறுவன் யார் என தெரிகிறதா?.. அட இவரு வேறுயாருமில்லை நடிகர் கவின் தான் (Kavin Raj).

இதையும் படிங்க: கௌதம் கார்த்திக் ரூட் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்

நடிகர் கவினின் லேட்டஸ்ட் இன்ஸ்டகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Kavin M (@kavin.0431)

நடிகர் கவின் ஆரம்பத்தில் ஸ்டார் விஜய்யில் வெளியான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் முகம் அறிமுகமானார். இதில் இவர் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இதை அடுத்ததாக சரவணன் மீனாட்சி முதல் சீசனில் ரட்சித்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமானார். இதில் வேட்டையன் என்ற வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் என்றே கூறலாம். இதை அடுத்ததாக ஆரம்பத்தில் பீட்ஸா, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்தாக கதாநாயகனாக அறிமுகமான படம்தான் நட்புன்னா என்னென்னு தெரியுமா.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

இதை அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்தார். இதிலும் மக்களிடையே இவர் பிரபலமானார். இத அடுத்து இவருக்கு முதல் வெற்றியை கொடுத்த படமாக அமைந்தது லிப்ட். கடந்த 2021ல் வெளியான படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. பின் டாடா, ஸ்டார் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். மேலும் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிளடி பெக்கர், கிஸ் மற்றும் மாஸ்க் போன்ற படங்கள் அந்தளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. மேலும் இவரின் கைவசத்தில் ஹாய், கவின் 9 மற்றும் தந்தட்டி பட இயக்குநருடன் ஒரு படம் போன்ற 3 படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.