கோலிவுட் நாயகன் டூ கார் ரேஸர்.. இந்த புகைப்படத்தின் சிறுவன் யார் தெரிகிறதா? தளபதி விஜய்யின் நண்பன்.. அட இவர்தான்!
Tamil Stars Childhood Photo: தென்னிந்திய சினிமாவில் பல உச்ச நடிகர்கள் இருந்துவருகிறார். ஆண்டுகள்தோறும் தொடர்ந்து இவர்கள் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது உண்டு. அந்த வகையில் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என பார்க்கலாம்.
பான் இந்திய சினிமாவில் பல்வேறு நடிகர்களும் பல்வேறு விதமான படங்களில் நடித்து தங்களின் திறமையையும், தனது ரசிகர்களையும் மகிழ்வித்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவரும். அந்த வகையில் மேலே இருக்கும் சிறுவன் யார் தெரியுமா?. இவர் சிறுவயது முதல் படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவரின் முதல் படம் தெலுங்கில் அமைந்தது. அந்த வகையில் இவரின் இந்த படத்தை அடுத்ததாக தமிழில் கதாநாயகனாகவே அறிமுகமானார். இவரின் முதல் படத்தை இயக்குநர் செல்வா (Selva) இயக்கியிருந்தார். கடந்த 1993ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வரத்தொடங்கினர். இவருக்கு எந்தளவிற்கு சினிமாவில் ஆர்வம் உள்ளதோ, அதோ போல கார் ரேஸிலும் (Car Race) ஆர்வம் மிக்கவர். இப்போது இந்த நடிகர் யார் என தெரிந்திருக்கும்.
இவர் இதுவரை இந்தியாவிற்காக மற்ற நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டிகளை கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். அட இந்த சிறுவன் வேறு யாருமில்லை நடிகர் அஜித் குமார்தான் (Ajith Kumar). இவரின் சிறுவயது புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: மீண்டும் பிக்பாஸில் வெடித்த பேட் டச் சண்டை… வைரலாகும் வீடியோ!
நடிகை ஷாலினி மற்றும் அஜித் குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
சினிமா டூ கார் ரேஸர் :
நடிகர் அஜித் குமார் கடந்த 1990ம் ஆண்டில் வெளியான என் வீடு என் கணவர் என்ற படத்தில் அங்கீகாரம் இல்லாத வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக 1993ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான பிரேமா புஸ்தகம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் இவர் லீட் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் அமராவதி. இயக்குநர் செல்வா இயக்கத்தில் இந்த படத்தில் அஜித் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சங்கவி நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த படத்தை தொடர்ந்து, பாசமலர்கள், பவித்ரா, ஆசை, வான்மதி, மைனர் மாப்பிளை என பல படங்களில் இணைந்து நடித்திருந்தார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்
மேலும் தளபதி விஜய்யுடன் ராஜாவின் பார்வையில் என்ற படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படங்களை அடுத்ததாக தற்போது வரையிலும் படங்களில் நடித்துவருகிறார். சினிமாவிற்கு வருவதற்கு முன்னே கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் அஜித் குமார் ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையில் சினிமாவில் தற்போது குறைவான படங்களே வரும் நிலையில், தனது ஆசை கனவான் கார் ரேஸில் இறங்கியுள்ளார். இதுவரை இந்தியாவிற்காக 4 வெற்றிக்கோப்பைகளையும் வென்றுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி என்ற படம் வெளியாகியிருந்த நிலையில், அதையடுத்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் AK64 படத்தில் இணைகிறார். இப்படத்தின் ஷூட்டிங் 2026 பிப்ரவரியில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.