Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விட்றாதடா தம்பி… தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்தது

15 Years Of Aadukalam Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியான படம் ஆடுகளம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்களும் படக்குழுவினரும் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் குறித்து தற்போது பார்க்கலாம்.

விட்றாதடா தம்பி… தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்தது
ஆடுகளம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Jan 2026 20:35 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஆடுகளம். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் ஆகும். முதல் படத்திலும் நடிகர் தனுஷை வைத்து தான் இயக்கி இருந்தார். அந்த பொல்லாதவன் படம் சூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப் படத்தின் மூலம் இந்த வெற்றிக் கூட்டணி அமைந்தது. அதன்படி இந்த கூட்டணியில் உருவான ஆடுகளம் படம் திரையரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கிஷோர், நரேன், வி.ஐ.எஸ்.ஜெயபாலன், முருகதாஸ், சென்ட்ராயன், மீனாள், பெரிய கருப்பு தேவர், தினேஷ் ரவி, ஜெயபிரகாஷ், ஹல்வா வாசு, வேல்ராஜ் மற்றும் மூணார் ரமேஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

15 ஆண்டுகளை நிறைவு செய்தது ஆடுகளம் படம்:

சேவல் சண்டை விடுவதில் பிரபலமானவராக இருக்கும் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் உடன் இருக்கிறார் தனுஷ். சிறு வயதில் இருந்தே சேவல் சண்டையை பார்த்தே வளர்ந்த தனுஷிற்கு அந்த சேவல் சண்டை என்பது உயிர். இப்படி தனக்கு மிகவும் பிடித்த அந்த சேவல் சண்டையால் அவரது வாழ்க்கையில் பல விசயங்கள் நடைபெறுகிறது. அதனை எல்லாம் அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதே படத்தின் கதை.

Also Read… Sreeleela: முதல் முறையாக என் நடிப்புக்காக பாராட்டு.. பராசக்தி படம் குறித்து எமோஷனலாக பேசிய ஸ்ரீலீலா!

காதல், நட்பு, நம்பிக்கை துரோம் என அனைத்தையும் இந்தப் படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் அழகாக காட்டி இருப்பார். இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனைப் படக்குழுவினரும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… சூர்யா46 பட ஷூட்டிங் இன்னும் முடியவில்லையா? ரசிகர்களிடையே வைரலாகும் மமிதா பைஜூவின் புகைப்படம்!