Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: தளபதி விஜய்யின் ஜன நாயகன் சென்சார் விவகாரம்… விசாரணை முடிந்தும் தீர்ப்பை ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்!

Thalapathy Vijays Jana Nayagan: தளபதி விஜய்யின் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகியிருந்தது ஜனநாயகன் . இந்த திரைப்படத்தின் சென்சார் பிரச்சனை காரணாமாக வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இன்று இப்படத்தில் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், விசாரணை முடிந்து, மீண்டும் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.

Jana Nayagan: தளபதி விஜய்யின் ஜன நாயகன் சென்சார் விவகாரம்… விசாரணை முடிந்தும் தீர்ப்பை ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்!
தளபதி விஜய்யின் ஜன நாயகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Jan 2026 17:15 PM IST

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமாக தயாராகியுள்ளது ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படம். இப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்க, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இப்படமானது கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸிற்கு முன்னே சென்சார் சான்றிதழ் வராததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் (Chennai High Court) கடந்த 2026 ஜனவரி 5ம் தேதியில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த விவகாரமானது ரசிகர்கள் அனைவரையும் உலுக்கிய நிலையில், கிட்டத்தட்ட 4 விசாரணை முடிந்துள்ளது. இந்நிலையில் இன்று 2026 ஜனவரி 20ம் தேதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விசாரணையானது விசாரணை செய்யப்பட்டிருந்த நிலையில், சென்சார் தரப்பு (Censor Board) மற்றும் படக்குழு தரப்பில் கடும் வாதங்கள் முன் வைக்கப்பட்டிருந்தது.

ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் படக்குழுவிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜன நாயகன் படக்குழு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டிருந்தது. அனைத்தையும் விசாரித்த தலைமை நீதிபதிகள் விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். அது குறித்த தேதியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்கள் மத்தில் மீண்டும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இரண்டாவது குழந்தைக்கு வெய்டிங்… மீண்டும் கர்ப்பமாக இருக்கும் அட்லீ – ப்ரியா தம்பதி!

ஜன நாயகன் பட சென்சார் விவகாரத்தில் இன்று (2026 ஜனவரி 20ம் தேதி) வாதாடப்பட்டது என்ன:

இன்று 2026 ஜனவரி 20ம் தேதியில் நடந்த விசாரணையில் ஜன நாயகன் படக்குழு சார்பில் அதிரடி வாதங்கள் வைக்கப்பட்டிருந்தது. முதலில் ஜன நாயகனை படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் ஒருமனதாக சான்றிதழை வழங்க முடிவுசெய்தனர், மேலும் படத்தை பார்த்து முடித்த பின்னர் அவர்களின் கருத்துக்களை தெரிவித்திருக்கவேண்டும், பின் வீட்டிற்கு சென்று 4 நாட்களுக்கு பின் அவர்கள் படத்தின் மீது புகாரளிக்க முடியாது என்றும் படக்குழு சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. மேலும் சென்சார் குழு, ஜன நாயகன் படத்தின் மீது வழக்கு பதிவு செய்தவர் யார் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க முடியது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புறநானூறு என்ற டைட்டில் பராசக்தியாக மாறியது இப்படித்தான்- சுதா கொங்கரா!

மேலும் படக்குழு சார்பில் சென்சார் குழுவானது சென்சார் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் வெளிபடை தன்மையை கொண்டுவரவே அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால இந்த ஜன ந்யாயகன் படத்திற்கு மட்டும் அப்படியே மாற்றாக நடந்துள்ளது என்றும், 2025 டிசம்பர் 23ம் தேதிக்கு பின் இப்படம் குறித்து எதுவும் பதிவு செய்யப்படவில்லை என படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதம் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதை விசாரித்த நீதிபதிகள் தெப்படி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

ஜன நாயகன் படத்திற்கு மேலும் ஒரு நெருக்கடி :

இந்த ஜன நாயகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்ததாக இன்று நடந்த சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் படக்குழு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.