Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒன்றாம் வகுப்பில் இருந்து இப்போ வரைக்கும்… வைரலாகும் கார்த்திக் சுப்பராஜின் இன்ஸ்டாகிராம் பதிவு

Director Karthick Subbaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவர் சமீபத்தில் ரெட்ரோ படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

ஒன்றாம் வகுப்பில் இருந்து இப்போ வரைக்கும்… வைரலாகும் கார்த்திக் சுப்பராஜின் இன்ஸ்டாகிராம் பதிவு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Aug 2025 21:09 PM

தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthick Subbaraj). இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும் நடிகை ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்தே தான் ஒரு தீவிர ரஜினிகாந்த் ரசிகன் என்பதை பல இடங்களில் பதிவு செய்துள்ளார். தன்னுடைய படத்தின் புரமோஷனில் இடையில் ரஜினிகாந்த் குறித்த டாபிக் வந்தால் படத்தை மறந்துவிட்டு ரஜினிகாந்த் குறித்து தொடர்ந்து பேசத்தொடங்கி விடுவார்.

அவ்வளவு பெரிய ரஜினிகாந்த் ரசிகர் அவர். இப்படி ஒருவருக்கு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் சும்மாவா இருப்பார். அப்படி ரஜினிகாந்தை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் பேட்ட. 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ரஜினிகாந்த் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு பிடித்த மாஸ் எலமெண்ட்ஸ் பல இந்தப் படத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதிய கார்த்திக் சுப்பராஜ்:

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி 50 வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் தான் முதல் வகுப்பு படிப்பதில் இருந்து தற்போது வரை ரஜினிகாந்தின் எவ்வளவு பெரிய ரசிகனாக இருக்கிறேன் என்பதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இருந்தார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனாக கலக்கிய படங்களின் லிஸ்ட் இதோ!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Karthik Subbaraj (@ksubbaraj)

Also Read… சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – முதல் படம் என்னனு தெரியுமா?