AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தள்ளிப்போகிறது விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் ரிலீஸ்!

Actor Vijay Antony: இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் உருவாகி இருந்த சக்தி திருமகன் படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு ஒத்தி வைத்துள்ளது. அது எப்போது என்று பார்க்கலாம்.

தள்ளிப்போகிறது விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் ரிலீஸ்!
சக்தி திருமகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Aug 2025 11:06 AM IST

நடிகர் விஜய் ஆண்டனி (Actor Vijay Antony) சினிமாவில் இசையமைப்பாளராகவே ரசிகர்களிடையே முதலில் அறிமுகம் ஆனார். இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாயகனாக விஜய் ஆண்டனி நடிக்கத் தொடங்கிய பிறகு இவரது படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் தற்போது நாயகனாக நடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மார்கன். சைக்கோ க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் எழுதி இயக்கி இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆவது இந்தப் படத்தில் தான். அறிமுகம் ஆன முதல் படமே இவருக்கு வெற்றியைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சக்தி திருமகனின் ரீலீஸை ஒத்திவைத்த படக்குழு:

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வந்தப் படம் சக்தி திருமகன். இந்தப் படத்தை விஜய் ஆண்டனி தனது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பதாகையின் கீழ் தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் அருண் பிரபு இயக்கி உள்ளார். இவர் முன்னதாக அருவி மற்றும் வாழ் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சக்தி திருமகன் முன்னதாக ஜூலை மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டு பின்பு மாற்றி செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த தேதியையும் மாற்றி வருகின்ற 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு சக்தி திருமகன் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Also Read… கூலி படத்தின் மோனிகா பாடலைப் பாராட்டிய மோனிகா பெலூசி – நெகிழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே

விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… சினிமாவில் நல்லவனா நடிச்சு நடிச்சு போர் அடிக்குது – நடிகர் நாகர்ஜுனா

Follow Us