Ravi Mohan : தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா – பிரம்மாண்டமாக நடத்தும் ரவி மோகன்!
Ravi Mohan Production House Launch Event : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரவி மோகன். இவர் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருப்பதாகச் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில். இந்த நிறுவனத்தின் தொடக்கவிழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளாராம். இது தொடர்பாக நடிகர் சிவராஜ்குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ரவி மோகன் (Ravi Mohan). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை (Kadhalika Neramillai). இந்த படத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இப்படமானது உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் ரவி மோகன், தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். மேலும் இவர் புதியதாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். “ரவி மோகன் புரொடக்ஷன்ஸ்” (Ravi Mohan Productions) என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை அவர், தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த நிறுவனத்தின் தொடக்க விழாவைச் சென்னையில், மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்கு நடிகர் ரவி மோகன் திட்டமிட்டுள்ளாராம். இது தொடர்பாகக் கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு, சமீபத்தில் சென்று அழைப்பிதழைக் கொடுத்திருந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வந்தது.




இதையும் படிங்க : தளபதி விஜய்யின் நடிப்பில் GOAT vs OG படம் உருவாகுமா? வெங்கட் பிரபு விளக்கம்!
நடிகர் ரவி மோகன் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் தொடர்பான அறிவிப்பு :
On this auspicious day, I’m thrilled to reveal the logo of #RaviMohanStudios !!!
Exciting updates coming your way soon…
Stay Tuned @Ravimohanstudio ✌🏻 pic.twitter.com/ACuBYeX9TR
— Ravi Mohan (@iam_RaviMohan) June 5, 2025
ரவி மோகன் புரொடக்ஷன் நிறுவனத்தின் தொடக்கவிழா ;
நடிகர் ரவி மோகனின் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்கவிழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம். இந்த நிகழ்ச்சியானது வரும் 2025, ஆகஸ்ட் 26 ஆம் தேதியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் ரவி மோகன் மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்குத் திட்டமிட்டு வருகிறார் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகிறது.
இதையும் படிங்க : ஆதரவற்ற குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிய வரலட்சுமி சரத்குமார்.. குவியும் பாராட்டு!
நடிகர் ரவி மோகனின் புதிய திரைப்படங்கள்
நடிகர் ரவி மோகனின் நடிப்பில் பல்வேறு படங்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக இவர், இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார். இந்த படமானது வரும் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவரின் நடிப்பில் ஜின் திரைப்படமானது, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் இருந்து வருகிறது. மேலும் இவரின் நடிப்பில் கராத்தே பாபு, ப்ரோ கோட் மற்றும் தனி ஒருவன் 2 போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் தனி ஒருவன் 2 படத்தின் ஷூட்டிங் குறித்த எந்தவித அறிவிப்புகளும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.