கூலி படத்திலிருந்து ஐயம் தி டேஞ்சர் பாடலின் லிரிக்கல் வீடியோ இதோ
I Am The Danger Lyric Video | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தில் இருந்து ஐயம் தி டேஞ்சர் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா வில்லனாக நடித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் நாயகனாக நடித்து வந்த நாகர்ஜுனா முதல் முறையாக வில்லனாக அதும் மிகவும் கொடூரமான வில்லனாக நடித்துள்ளதாகவும் இதனைப் பார்க்கும் குடும்ப ரசிகர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் ஆவளாக உள்ளது என்று நாகர்ஜுனா முந்தைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். மேலும் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைப்பெற்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் நாகர்ஜுனா சினிமாவில் மிகவும் நல்லவனாக நடித்து நடித்து சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் வில்லனாக நடித்துப் பார்த்தேன் மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்த கூலி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள நிலையில் வில்லன் நாகர்ஜுனாவிற்காக தனியாக பாடல் ஒன்றை இயற்றி உள்ளார். இதுகுறித்து கூலி பட விழாவில் நடிகர் நாகர்ஜுனா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூலி படத்தில் இருந்து ஐயம் தி டேஞ்சர் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஐயம் தி டேஞ்சர் லிரிக்கள் வீடியோவை வெளியிட்ட படக்குழு:
The swag-overloaded #IamTheDanger is out now!💥 #Coolie 😎
▶️ https://t.co/a7hDVDAJQe#Coolie releasing worldwide August 14th@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica… pic.twitter.com/cCxeOgKKpk
— Sun Pictures (@sunpictures) August 13, 2025
Also Read… Nagarjuna : கூலி படம் 100 பாட்ஷாவுக்கு சமம்.. லோகேஷ் கனகராஜை புகழ்ந்த நாகார்ஜுனா!
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த ஐயம் தி டேஞ்சர் என்ற பாடலை சித்தார்த் பஸ்ரூர், அனிருத் ரவிச்சந்தர் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். மேலும் இந்தப் பாடலை ஹைசன்பெர்க் (Heisenberg) எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த பாடலாசிரியரின் பெயர் அனிருத் மற்றும் லோகேஷ் இணையும் படங்களில் மட்டுமே நாம் காணமுடியும்.
ஏன் என்றால் அப்படி ஒரு நபர் இல்லை அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் படங்களில் அவர்கள் இருவரும் இணைந்து எழுதும் பாடல்களுக்கு ஒரு புனைப் பெயராக ஹைசன்பெர்க் என்ற பெயரை பயன்படுத்துகிறார்கள். இதுகுறித்து அனிருத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியபோது தெரியவந்தது.
Also Read… இது 1950 மாடல்… பார்ட்ஸ் எல்லாம் மாத்திட்டாங்க – கூலி பட விழாவில் கலகலப்பாக பேசிய ரஜினிகாந்த்!