Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அலேலா போலேமா.. கூலி படத்தின் ட்ரெய்லர் பாடலுக்கு அர்த்தம் இதுதான்- அனிருத் விளக்கம்!

Anirudh Ravichander : தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் அனிருத் ரவிச்சந்தர். இவரின் இசையமைப்பில் பான் இந்தியப் படமாக வெளியீட்டிற்குக் காத்திருக்கும் படம் கூலி. இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற பாடல் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், அப்பாடலின் விளக்கம் பற்றி அவர் பேசியுள்ளார்.

அலேலா போலேமா.. கூலி படத்தின் ட்ரெய்லர் பாடலுக்கு அர்த்தம் இதுதான்- அனிருத் விளக்கம்!
கூலி திரைப்படம் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 12 Aug 2025 21:52 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்குக் கடத்திருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh kanagaraj) இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்திற்குப் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து சுமார் 8 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மோனிகா, கூலி பவர் ஹவுஸ் போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதில் மோப்ஸ்டா என்ற பாடல் கூலி படத்தின் ட்ரெய்லரில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அந்த பாடலில் “அலேலா போலேமா” (Alela Polema ) என்ற வரிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த அலேலா போலேமா என்ற வரிக்கு, விளக்கம் என்ன என்பதைப் பற்றி அனிருத் கூறியுள்ளார். அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார், அதில் பேசிய அவர் “அலேலா போலேமா” என்ற வார்த்தை ஒரு கிரீக் வார்த்தையாகுமாம். அதற்கு அர்த்தம் “அவர் மற்றவர்களுடன் சண்டையிடுகிறார்” என்பது அர்த்தமாகும் என அவர் கூறியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சினிமாவில் நல்லவனா நடிச்சு நடிச்சு போர் அடிக்குது – நடிகர் நாகர்ஜுனா

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கொடுத்த விளக்கம்

அதில் அவர், “அலேலா போலேமா என்ற வரிகளை முதலில் லோகேஷ் கனகராஜிடம் அனுப்பினேன். இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம், ஆனால் டீசரில் இந்த லைன் நன்றாக இருந்தது என லோகேஷ் என்னிடம் கூறினார். அந்த வார்த்தையை நான் தற்செயலாகத்தான் பயன்படுத்தினேன். இந்த வார்த்தைக்கு இணையத்தில் அர்த்தம் தேடும்போது, அதில் கிரீக்கில் “அவர் மற்றவர்களுடன் சண்டையிடுகிறார்” என்று அர்த்தம் எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் எனக்கு கிரீக் தெரியாது” என அனிருத் அதில் பேசியிருந்தார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : கூலி படத்தின் மோனிகா பாடலைப் பாராட்டிய மோனிகா பெலூசி – நெகிழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே

கூலி படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :

நடிகர் ரஜினிஃனத்தின் 171வது படமாக உருவாகியிருப்பது இந்த கூலி. இப்படமானது பான் இந்திய மொழிகளான தமிழ்,தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் நடிகர்கள் சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சவுபின் ஷாஹிர் மற்றும் ஸ்ருதி ஹாசன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் உலக அளவில் முதல் நாளிலேயே, சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.