மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் – சுந்தர் சி கூட்டணி? வைரலாகும் தகவல்
Director Sundar C: கோலிவுட் சினிமாவில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையோடு இருப்பவர் சுந்தர் சி. இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கி இருந்த மத கஜ ராஜா இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

கோலிவுட் சினிமாவில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான முறை மாமன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் சுந்தர் சி (Sundar C). இவர் நடிகரும் இயக்குநருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதன் காரணமாகவே மணிவண்ணன் இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்து படங்களில் ஒரு சில காட்சிகளில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். பிறகு இயக்குநராக அறிமுகம் ஆன பிறகு அவர் இயக்கும் படங்களில் கேமியோ செய்து வந்தார். இப்படி இருக்கும் சூழலில் 2006-ம் ஆண்டு இயக்குநர் சூரஜ் இயக்கத்தில் வெளியான தலைநகரம் படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார் சுந்தர் சி. நாயகனாக இவரது படங்கள் வெற்றிப்பெற்றது போல இயக்குநராக இவரது இயக்கத்தில் வெளியான பலப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாமன், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுகுடி, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னை தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, அழகர் சாமி, உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், வின்னர், கிரி, கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு மற்றும் அரண்மனை பாகங்கள் ஆகியவை ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




மீண்டும் இணையும் விஷால் – சுந்தர் சி கூட்டணி:
இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்து இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கிய மத கஜ ராஜா படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்தப் படம் சில காரணங்களால் வெளியிடப்படாமல் இருந்தது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான மத கஜ ராஜா எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. குறிப்பாக புதிதாக தயாரிக்கப்பட்ட படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தகது.
இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் மீண்டும் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#MTexclusive: #Vishal & Dir #SundarC are teaming up again after the success of Madha Gaja Raja.
– Hiphoptamizha is composing the music for this film.
– Official Announcement Coming 🔜 pic.twitter.com/XYz0mxofT5— Movie Tamil (@_MovieTamil) August 19, 2025