Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுந்தர் சி சொன்னது பளிச்சிடுச்சு… மத கஜ ராஜா குறித்து ஓப்பனாக பேசிய சந்தானம்

Actor Santhanam About Madha Gaja Raja: காமெடியனாக தனது வாழ்க்கையை தொடங்கிய சந்தானம் தற்போது கோலிவுட் சினிமாவில் நாயகனாக வலம் வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது டிடி ரிட்டர்ன்ஸ்: நெக்ஸ்ட் லெவல் படம் மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சுந்தர் சி சொன்னது பளிச்சிடுச்சு… மத கஜ ராஜா குறித்து ஓப்பனாக பேசிய சந்தானம்
மத கஜ ராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Apr 2025 17:26 PM IST

நடிகர் சிலம்பரசன் (Silambarasan) நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான மன்மதன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் சந்தானம் (Santhanam). அதனைத் தொடந்து விஜய், தனுஷ், அஜித், சிம்பு , ஜெயம் ரவி, விஷால், ஆர்யா என பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடித்தார். இவரது நடிப்பில் வெளியான பிப்ரவரி 14, இதயத் திருடன், இங்லீஷ்காரன், அன்பே ஆருயிரே, ஒரு கல்லூரியின் கதை, சம்திங் சம்திங், வல்லவன் என தொடந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் சந்தானம். இவரது நடிப்பில் வெளியான கமெடிகள் அனைத்துமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு வெளியான அறை எண் 305-ல் கடவுள் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சந்தானம் 2014-ம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நாயகனாகவே நடித்தார்.

இதனைத் தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடிகர் சந்தானம் நடித்து வருகிறார். காமெடி கதாப்பாத்திரத்திற்கான வாய்புகள் அதிகம் வந்தும் அதனை நிராகரித்துவிட்டு தொடர்ந்து நடித்தால் நாயகன் மட்டுமே என்று நடித்து வருகிறார். இந்த நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு நடிகர் சந்தானம் காமெடியனாக நடித்தப் படம் இந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

விஷால் நடிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருந்த மத கஜ ராஜா படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த நிலையில் ஜனவரி மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

பொங்கல் ரிலீஸில் இருந்த புதுப் படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்த மத கஜ ராஜா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கு முக்கிய காரனம் சந்தானத்தின் காமெடி என்றே சொல்லலாம். படத்தில் வலுவான கதை இல்லை என்றாலும் சந்தானத்தின் காமெடிக்கு திரையரங்கே சிரித்துக் கொண்டிருந்தது.

படம் உருவாகி சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது கிடப்பில் கிடக்கும் மற்ற படங்களின் படக்குழுவினருக்கு ஊக்கத்தை கொடுக்கும் விதமாக இருந்தது. இதுகுறித்து பல தயாரிப்பாளர்கள் இயக்குநர்களும் வெளிப்படையாக பேசியிருந்தனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி பேசியது குறித்து சந்தானம் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,  சந்தானம் உங்க நேரம் ரொம்ப நல்லா இருக்கு. அது உச்சத்துல இருக்குது. நீங்க தொட்டது எல்லாம் வெற்றிதான். அதனால் தான் சொல்கிறேன் மதகஜராஜா படத்திலும் உங்க பார்ட் நிச்சயமாக பெரிய ஹிட் ஆகும்னு நினைக்கிறேன் என்றார். அவர் சொன்னது பளிச்சிடுச்சு என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.