Vishal35: ‘விஷால்35’ படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? இயக்குநர் ரவி அரசு வெளியிட்ட அப்டேட்!
Vishals 35th Movie Title Teaser Update : தமிழில் பிரபல நாயகனாக இருந்து வருபவர் விஷால். இவரின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் படம் விஷால்35. இப்படத்தை ரவி அரசு இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷால் (Vishal). இவரின் நடிப்பில் விஷால்35 (Vishal35) என்ற படமானது மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபல தமிழ் இயக்குநரான ரவி அரசு (Ravi Arasu) இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே நடிகர் அதர்வாவின் நடிப்பில், ஈட்டி (Eetti) மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஷாலுடன் இவர் இணைந்துள்ள படம் விஷால்35. இந்த படத்தில் விஷால் முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் துஷாரா விஜயன் (Dushara vijayan) மற்றும் அஞ்சலி (Anjali) இணைந்து நடித்து வருகிறார்கள்.
இப்படத்திற்கு தற்காலிகமாக “விஷால்35” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் குறித்தது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விஷால்35 படத்தின் டைட்டில் டீசர் நாளை 2025, ஆகஸ்ட் 24 ஆம் தேதியில், காலை 11 :45 மணியளவில் வெளியிடப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை இப்படத்தின் இயக்குநர் ரவி அரசு வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க : வல்லவன் படம் ரிலீஸானப்போ ரொம்ப கஷ்டப்பட்டேன் – நடிகை சந்தியா!
இயக்குநர் ரவி அரசு வெளியிட விஷால்35 படத்தின் டைட்டில் டீசர் அறிவிப்பு :
💥🔥⚓Get ready for the Power packed Title teaser of #Vishal35 releasing tomorrow at 11:45am ⚓🔥💥@VishalKOfficial @SuperGoodFilms_ @officialdushara @yoursanjali @gvprakash @dhilipaction @Richardmnathan @Gdurairaj10 @Ponparthiban @RIAZtheboss pic.twitter.com/ibBiWScNzL
— Raviarasu (@dir_raviarasu) August 23, 2025
நடிகர் விஷாலின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் மத கஜ ராஜா. இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் இப்படமானது 13 வருடங்களுக்கு பின் வெளியாகியிருந்தது. கடந்த 2025, ஜனவரி மாதத்தில் வெளியான இப்படமானது சுமார் ரூ 55 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை , இயக்கி நடிப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க : மதராஸியில் மாறுபட்ட சிவகார்த்திகேயன்.. ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன விஷயம்!
இந்நிலையில்தான் இயக்குநர் ரவி அரசுடன் விஷால்35 படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் பூஜை கடந்த 2025, ஜூலை மாதத்தில் நடைபெற்றது. பின் படத்தின் ஷூட்டிங் சென்னை பூந்தமல்லியில், கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விஷால்35 படத்தின் இசையமைப்பாளர் யார் :
இந்த விஷால்35 படத்தை இயக்குநர் ரவி அரசு இயக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த விஷால்35 படமானது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் 99வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கடத்தல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட்ட திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.