Madharaasi : சிவகார்த்திகேயனின் “மதராஸி” பாடல்கள்.. படக்குழு வெளியிட்ட சிறப்பான அப்டேட்!
Madharaasi Movie Full Album : நடிகர் சிவகார்த்திகேயனின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மதராஸி. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கிய நிலையில், தற்போது படக்குழு இப்படத்தின் முழு பாடல்களின் ஆல்பத்தை வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பிலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் (AR Murugadoss) இயக்கத்திலும் தயாராகியிருக்கும் படம் மதராஸி (Madharaasi). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு “SK X ARM” என அறிவிக்கப்பட்டிருந்தது. அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இந்த மதராஸி படத்தில் இணைந்து நடித்திருந்தார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்துக்கு முன் இந்தியில் நடிகர் சல்மான்கானை வைத்து, சிக்கந்தர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2025 மார்ச் மாதத்தில் வெளியானது. பாலிவுட்டில் வெளியான இப்படமானது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தை அடுத்து தமிழில் இவர் இயக்கியிருந்த படம் மதராஸி. இப்படம் வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
சுமார் 5 வருடங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தின் மூலம், மீண்டும் களமிறங்குகிறார். இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், இப்படத்தின் முழு பாடல்களின் ஆல்பத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மொத்தமாக மதராஸி படத்தின் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க : அனிருத்தின் திருமணம் எப்போது? சிவகார்த்திகேயன் சொன்ன ஆச்சர்ய பதில் இதோ!
சிவகார்த்திகேயன் வெளியிட்ட மதராஸி படத்தின் முழு ஆல்பம் பதிவு :
Enjoy the musical blast by my dear rockstar @anirudhofficial 🎶💥💥💥💥
And my personal favourite is #Thangapoove ❤️❤️▶️ https://t.co/RMdsjVF2ND#MadharaasiFromSep5
🎬 @ARMurugadoss pic.twitter.com/YLrc9UzZss
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 27, 2025
மதராஸி திரைப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தார். அதை அடுத்ததாக தமிழில் இவர் நடித்திருக்கும் 2வது படம் மதராஸி. இவர் தமிழில் முதலில் ஒப்பந்தமான படம் மதராஸிதான். ஆனால் இப்படத்தின் ஷூட்டிங் காரணமாக இவரின் நடிப்பில் ஏஸ் படமானது முதலில் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க : சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் நாயகனாகும் அபிஷன் ஜீவிந்த்!
இந்த மதராஸி படமானது அதிரடி காதல், ஆக்ஷன் மற்றும் அதிரடி சண்டைகள் என மாறுபட்ட படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் வில்லனாக துப்பாக்கி பட நடிகர் வித்யுத் ஜம்மவால் நடித்துள்ளார். இவர் தமிழில் துப்பாக்கி, அஞ்சான் போன்ற படங்களில் நடித்திருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதராஸி படத்துடன் மோதும் படங்கள் :
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் காதி, தி கேர்ள்பிரண்ட், பேட் கேர்ள், காந்தி கண்ணாடி போன்ற திரைப்படங்கள் தமிழில் வெளியாகிறது. இதில் நிச்சயமாக இந்த படங்களுக்கு பாக்ஸ் ஆபிசில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.