AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு பட ப்ரீ ரிலீஸ் ஈவெண்டில் கலந்துகொள்ள சூர்யா உடன் சென்ற பிரபல இயக்குநர் – வைரலாகும் போட்டோ

Director Siruthai Siva accompanies Suriya to the Karuppu Movie Event | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சிறுத்தை சிவா. இவர் சூர்யா உடன் கருப்பு பட விழாவில் கலந்துகொள்ள சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்பு பட ப்ரீ ரிலீஸ் ஈவெண்டில் கலந்துகொள்ள சூர்யா உடன் சென்ற பிரபல இயக்குநர் – வைரலாகும் போட்டோ
சூர்யா உடன் இயக்குநர் சிறுத்தை சிவாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 May 2026 16:40 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த ஆண்டில் முதலாவதாக வெளியாக உள்ளது கருப்பு படம். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இயக்கியது மட்டும் இன்றி படத்தில் நெகட்டிவ் கதாப்பாத்திரத்திலும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து உள்ளார். அது நேற்று வெளியான கருப்பு படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரிகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக களமிறங்கி உள்ளது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைப்பெற்ற நிலையில் அடுத்தடுத்த ஊர்களில் தொடர்ந்து படக்குழுவின் சந்திப்பு நடைப்பெற்று வருகின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கருப்பு பட ஈவெண்டில் கலந்துகொள்ள சூர்யாவுன் சென்ற பிரபல இயக்குநர்:

அதன்படி படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் ஹைதராபாத்தில் இன்று மாலை கருப்பு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. தெலுங்கு மொழியில் இந்தப் படத்திற்கு வீரபத்ருடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடிகர் சூர்யா ஹைதராபாத்திற்கு செல்லும் போது அவருடன் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா சென்றுள்ளார். இவர்கள் இருவரும் முன்னதாக கங்குவா படத்தில் கூட்டணி வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் மக்களிடையே இருந்து வந்தாலும் இவர்கள் இருவரும் ஒன்றாக காணப்பட்டது வைரலாகி வருகின்றது.

Also Read… இன்று மாலை வெளியாகிறது த்ரிஷ்யம் 3 படத்தின் ட்ரெய்லர் – அப்டேட் சொன்ன மோகன்லால்

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா ரசிகர்களே தயாரா? கருப்பு படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது தொடக்கம் தெரியுமா?

Follow Us