இன்று மாலை வெளியாகிறது த்ரிஷ்யம் 3 படத்தின் ட்ரெய்லர் – அப்டேட் சொன்ன மோகன்லால்
Mohanlal's Drishyam 3 Movie Trailer Will Be Released Today Evening | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் உருவாகி உள்ள த்ரிஷ்யம் 3 படத்தின் ட்ரெய்லர் இன்று மலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தென்னிந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகின்றனர். தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பேட்ரியாட். இந்தப் படத்தில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடித்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த பேட்ரியாட் படத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் த்ரிஷ்யம் 3. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




இன்று மாலை வெளியாகிறது த்ரிஷ்யம் 3 படத்தின் ட்ரெய்லர்:
இயக்குநர் ஜித்து மாதம் எழுதி இயக்கிய இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. இந்த த்ரிஷ்யம் 3 படம் வருகின்ற மே மாதம் 21-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த் த்ரிஷ்யம் 3 படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இன்று 09-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு மாலை 7 மணிக்கு த்ரிஷ்யம் 3 படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ராம் சரணின் பெத்தி பட ஷூட்டிங்கை பார்வையிட்ட சிரஞ்சீவி… BTS வீடியோவை பகிர்ந்த படக்குழு!
நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Drishyam3 official trailer, today at 7:00 PM IST.
Watch the launch live @https://t.co/SVIezEPUZD@jeethu4ever @antonypbvr@KumarMangat @jayantilalgada @AbhishekPathakk #MeenaSagar @aashirvadcine @PanoramaMovies @PenMovies @ram_rampagepix #RavindraAuti @Rajeshmenon1969… pic.twitter.com/6n83vd9ekw
— Mohanlal (@Mohanlal) May 9, 2026
Also Read… அதிரடி படத்திற்கு கிடைத்த சென்சார் அப்டேட் என்ன தெரியுமா?