AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜனநாயகனை போல கருப்பு படமும் ஆன்லைனில் லீக்? தயாரிப்பாளர்கள் பரபரப்பு தகவல்

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் மே 13, 2026 இன்று வெளியாக வேண்டிய கருப்பு திரைப்படம் சில காரணங்களால் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வட மாநிலங்களில் அனுமதியின்றி படம் வெளியாகியுள்ளதாக தயாரிப்பாளர்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஜனநாயகனை போல கருப்பு படமும் ஆன்லைனில் லீக்? தயாரிப்பாளர்கள் பரபரப்பு தகவல்
விஜய் - சூர்யா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 May 2026 18:16 PM IST

ஜனநாயகன் படத்தைப் போல கருப்பு படமும் ஆன்லைனில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக டி.சிவா உள்ளிட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய டி.சிவா, கருப்பு படத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் அனுமதியின்றி வெளியாகியுள்ளது. தவறு நடந்ததை கியூப் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. ஜனநாயகன் போல் கருப்பு படமும் இணையத்தில் கசிய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நஷ்ட ஈடு கொடுப்பதாக கியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது என்றார். இந்த தகவல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகனை போல கருப்பு படமும் ஆன்லைனில் லீக்?

இதற்கிடையில் கருப்பு படம் காலை திட்டமிட்டபடி வெளியாகாத நிலையில் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிலையில் கருப்பு படத்தின் மாலை காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சூர்யா ரசிகர்கள் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க : கருப்பு படத்தின் 9 மணி சிறப்பு காட்சி ரத்தாக என்ன காரணம்? தயாரிப்பாளர் சொன்ன விசயம்

இதற்கிடையில் கருப்பு பட இயக்குநர் ஆர்ஜே பாலாஜி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படி நடந்திருக்க கூடாது. படம் பார்ப்பதே நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளில் இருந்து வெளியே வருவதற்காக தான். இன்று மாலை பிரச்னைகள் எல்லாம் சரியாகி படம் வெளியாகும் என நம்புகிறேன். உங்களுக்கு எல்லாம் நிச்சயம் பிடிக்கும் என அவர் உருக்கமாக வீடியோ வெளியிட்டிருந்தார். அவர் கண்கலங்கிய படி பேசியது காண்போரை நெகிழ செய்தது.

அழுதபடி பேடிய ஆர்ஜே பாலாஜி

 

 

View this post on Instagram

 

A post shared by RJ Balaji (@irjbalaji)

இதற்கிடையில் புதுச்சேரியில் உள்ள சூர்யா ரசிகர்கள் கருப்பு படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கருப்பு படத்தை விரைவில் வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

78288

சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ், மாளவிகா உள்ளிட்டோர் நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருப்பு. இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரெயல்ர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் தான் இந்தப் படம் மே 14, 2026 இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி காரணமாக படத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Follow Us