AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எம்.ஜி.ஆர் போல மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற வேண்டும் – முதல்வர் விஜய்க்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி வாழ்த்து..

CM Vijay: முதலமைச்சர் விஜய்க்கு சிரஞ்சீவி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், மக்கள் மையப்படுத்திய ஆட்சியின் மூலம் தமிழ்நாடு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்க வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர் போல மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

எம்.ஜி.ஆர் போல மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற வேண்டும் – முதல்வர் விஜய்க்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி வாழ்த்து..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 May 2026 20:06 PM IST
மே 15, 2026: சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்த விஜய், “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கி, சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். கிட்டத்தட்ட 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த சாதனையை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்தான் நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

திரையுலகைச் சேர்ந்த பலரும் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை தொலைபேசியில் தொடர்புகொண்ட சிரஞ்சீவி, அவருடன் அன்பான உரையாடல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன சிரசீவி:

அப்போது, முதலமைச்சர் விஜய்க்கு சிரஞ்சீவி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், மக்கள் மையப்படுத்திய ஆட்சியின் மூலம் தமிழ்நாடு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்க வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர் போல மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க: ஜெர்சி படத்தில் நானியின் உணர்வுபூர்வமான காட்சியை ரீ கிரியேட் செய்த ஆர்.ஜே.பாலாஜி – வைரலாகும் வீடியோ

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், சமீபத்தில் வெளியான “மனசங்கர வரப்பிரசாத் காரு” திரைப்படத்தை பார்த்ததாகவும், அதில் சிரஞ்சீவியை திரையில் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அதேபோல், KVN Productions தயாரிப்பில் உருவாகி வரும் சிரஞ்சீவியின் அடுத்த திரைப்படத்திற்கும் தனது வாழ்த்துகளை முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில், முதலமைச்சர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் சிரஞ்சீவி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டு வந்த தவெக:

தமிழக வெற்றிக் கழகம் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருப்பது, தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. அதேபோல், மே 13ஆம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக 144 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதன் மூலம் தமிழக வெற்றிக் கழக அரசு தொடரும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை சட்டப்பேரவை சபாநாயகர் J. C. D. Prabhakar அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us