சேயோன் படத்தின் தனது காட்சிகளுக்கான ஷூட்டிங்கை முடித்த பாக்யஸ்ரீ போர்ஸ்!
Bhagyashri Borse Seyon Movie Shooting: தற்போது தமிழ் மக்கள் மத்தியில் ரதிமாவாக இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் நாயகியாக நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது தனது காட்சிகளுக்கான ஷூட்டிங்கை முடித்தக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.
இந்தி சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து, பின் தெலுங்கு சினிமாவின் மூலம் நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர்தான் பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse). இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் லெனின் (Lenin). தெலுங்கு நடிகர் அகீல் நடிப்பில் வெளியான இப்படத்தில், பாரதி என்ற வேடத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. மேலும் இவர் ஏற்கனவே காந்தா (Kaantha) மற்றும் கிங்டம் (Kingdom) போன்ற பிரம்மாண்ட படங்களிலும் லீட் நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த வரிசையில், தற்போது தமிழில் நேரடியாக நடித்துவரும் புது படம்தான் சேயோன் (Seyon). நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பிலும், இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கத்திலும் இப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இதில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் லீட் நாயகியாக நடித்துள்ளார்.




இதையும் படிங்க: சிக்மா பட கதையை முதலில் அவரிடம் சொன்னேன் – ஜேசன் சஞ்சய்!
சேயோன் படத்தின் ஷூட்டிங்கை முடித்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்:
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் முதல் முறையாக நேரடியாக தமிழில் நடித்துள்ள படம் சேயோன். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கிய நிலையில், தற்போது தனது காட்சிகளுக்கான ஷூட்டிங்கை முடித்ததாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சேயோன் பட ஷூடிங் பேக்கப் என அதில் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அழகும் காதலும் கலந்த இனிமை.. அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் படம் மனதை தொட்டதா?
பாக்யஸ்ரீ போர்ஸ் சேயோன் பட ஷூட்டிங்கை முடித்ததாக வைரலாகும் பதிவு:
#BhagyashriBorse completes her schedule for #Seyon ✨❤️
This should’ve been a celebration-worthy update for #Sivakarthikeyan fans. Unfortunately, a single unconfirmed rumour has already created unnecessary negative waves.
Rumours travel fast, but official updates take their own… pic.twitter.com/gYccp1w97t
— Balaji (@RDBalaji) August 28, 2026
ரதிமாவாக பாக்யஸ்ரீ போர்ஸ்;
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தமிழில் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் 6வது இண்டீ பாடலான ரதிமா பாடலில் சிறப்பு நடனமாடியிருந்தார். இதில் சாய் அபயங்கர் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடனமாடியிருந்த நிலையில், இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் இவர் சேயோன் படத்திலும் நாயகியாக நடித்திருக்கும் நிலையில், இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் நிச்சயம் பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.