இந்திய அணிக்காக களமிறங்கும் சேவாக் – டிராவிட்டின் மகன்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு
Dravid and Sehwag Sons in India U19 : கிரிக்கெட் ஜாம்பவான்களான வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட்டின் மகன்கள் இந்திய அணிக்காக களமிறங்குகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் இந்திய அணியின் சார்பில் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வய் டிராவிட், சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் சார்பில் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வய் டிராவிட், சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் களமிறங்குகின்றனர். 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களிடம் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களை பட்டியலிட சொன்னால் அந்த லிஸ்ட்டில் ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக்கின் பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கிறது. ஒருவர் நிதான ஆட்டத்துக்கு சொந்தக்காரர் என்றால் மற்றொருவர் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்றவர்.
இந்திய அணிக்காக களமிறங்கும் சேவாக் – டிராவிட்டின் மகன்கள்
இருவரும் இந்திய அணிக்கு டாப் ஆர்டரில் களமிறங்கி பல சாதனைகளை செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் அனைத்து தரப்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் இருவரது மகன்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் தொடருக்காக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இதையும் படிக்க : IND vs SL: இந்திய அணியின் வெற்றி நிச்சயம்? ஃபாலோ-ஆனுக்குப் பிறகு இலங்கையின் சாதனை இதுதான்!




இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுககு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடர் வரும் செப்டம்பர் 18, 2026 அன்று துவங்குகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் 3 போட்டிகள் ராஜ்கோட்டிலும், அகமதாபாத்தில் 2 போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன. இந்தப்போட்டியின் இந்திய அணி அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் லட்சிய ரைசாந்தானி கேப்டனாகவும், யஷ்வர்தன் சவுகான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்களான வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் மகன்களான ஆர்யவீர் சேவாக் மற்றும் அன்வய் டிராவிட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்திய அணியில் லட்சிய ரைசந்தானி, யஷ்வர்தன் சவுகான், ரஜத் பாகேல், ஆர்யவீர் சேவாக், வி.கே.வினித், குஷாக்ரா ஓஜா, அர்ஜுன் ராஜ்புத், மனல் சவுகான், அன்வய் டிராவிட், வி.யஷ்வீர், ரோகித் யாதவ், ஷாவின் வினோத், மோகித் உல்வா, சிகுருபதி வங்கடா மற்றும் காவ்யா படேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். குறிப்பாக அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது டெல்லி பிரீமியர் லீக் 2026 தொடருக்காக சென்டரல் டெல்லி கிங்ஸ் அணிக்காக ஆர்யவீர் விளையாடி வருகிறார்.
இதையும் படிக்க : IND vs SL: மானவின் மாயாஜால சுழல்.. ரிஷப் பண்ட் ‘ராக்கெட்’ ஸ்டம்பிங்.. வைரலாகும் வீடியோ!
மற்றொரு பக்கம் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வய் டிராவிட், கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். வினூ மங்கட் டிராபி தொடரில் 6 இன்னிங்ஸ்களில் 220 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். அன்வய் ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடிய அனுபவம் பெற்றவர். அவருக்கு சர்வேதச அளவில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.