AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs SL: சமனில் முடிந்த 2வது டெஸ்ட்.. 5வது இடத்தில் முடங்கிய இந்தியா.. WTC 27 பைனலுக்கு செல்லுமா?

World Test Championship Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி எப்படி தகுதி பெறும் என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற, இந்திய அணி வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளன. இதில் 6 போட்டிகளில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும்.

IND vs SL: சமனில் முடிந்த 2வது டெஸ்ட்.. 5வது இடத்தில் முடங்கிய இந்தியா.. WTC 27 பைனலுக்கு செல்லுமா?
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Aug 2026 18:32 PM IST

காலி டெஸ்டில் அபார வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, கொழும்பு டெஸ்டில் ஏமாற்றத்தை கொடுத்தது. கொழும்பில் இந்திய அணியின் (Indian Cricket Team) வெற்றி உறுதியாகத் தோன்றிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் சோனல் தினுஷாவின் அபாரமான சதமானது இரண்டாவது டெஸ்டை இலங்கை சமன் செய்ய உதவியது. இலங்கைக்கு (IND vs SL) எதிரான இந்தப் போட்டியின் சமன், இந்திய அணிக்கு ஒரு பெரிய அடியாக அமைந்துள்ளது. சுப்மன் கில் படை வெற்றி பெற்றிருந்தால், உலக டெஸ்ட் போட்டிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 4வது இடத்தை எட்டியிருக்க முடியும். ஆனால் கொழும்பு டெஸ்ட் சமன் ஆனதால், இந்திய அணி தொடர்ந்து ஐந்தாவது இடத்திலேயே தேங்கிவிட்டனர்.

ALSO READ: முடிந்த இலங்கை சுற்றுப்பயணம்.. இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது, ​​யாருக்கு எதிராக?

WTC புள்ளிகள் அட்டவணை நிலை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி அட்டவணையில், இந்தியா 51.32 PCT புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. இலங்கை 33.33 PCT புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வங்கதேசம் 55.56 PCT புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் புள்ளி அட்டவணையின் கடைசி இடத்தில் உள்ளது.

இந்திய அணி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு எப்படி தகுதி பெறும்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி எப்படி தகுதி பெறும் என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற, இந்திய அணி வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளன. இதில் 6 போட்டிகளில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும். இதன் பொருள், இந்திய அணி ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் தோற்றாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகள் சமனில் முடிந்தாலோ, அது இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துவிடும்.

ALSO READ: இலங்கையின் போராட்டத்தால் டிராவில் முடிந்த போட்டி – தொடரை கைப்பற்றிய இந்தியா

இந்திய அணி அடுத்ததாக எந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்?

இந்திய அணி அடுத்ததாக வருகின்ற 2026 அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்வது மிகவும் கடினம் எனக் கருதப்படுவதால், இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். இது தவிர, இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இந்த 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்றால் மட்டுமே, இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற முடியும்.

Follow Us