மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன்- சுகன்யா.. முழு பின்னணி இதோ!
DMK candidates Paranthaman- Suganya Details : தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக சார்பி ல் போட்டியிடும் பரந்தாமன் மற்றும் சுகன்யா ஆகியோரின் பின்னணி குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் வி ரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் கட்டமாக, அதிமுக சார்பில் விருப்ப மனு நேற்று முதல் விநியோகம் தொடங்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் முதல் முதலாக திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் திமுக வழக்கறிஞரான பரந்தாமனும், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பின்னணி என்ன என்பதை இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம்.
மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் பரந்தாமன்:
மருந்தகம் தொகுதியில் போட்டியிடும் ஐ. பரந்தாமன் பி.ஏ., பி. எல். படித்துள்ளார். இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை மாநில இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். அத்துடன், திமுக சார்பில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் ( தனி) தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார்.
மேலும் படிக்க: “திமுகவை இயக்கியது ரத்தீஷ் எனும் பவர் புரோக்கர்!”.. அமைச்சர் நிர்மல்குமார் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்!




முதலில் வாய்ப்பு மறுப்பு- தற்போது மீண்டும் வாய்ப்பு
இதேபோல, கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பரந்தாமன் தோல்வியை தழுவினர். அந்த தேர்தலில் 92 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் எழும்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுக தலைமையிடம் பரந்தாமன் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபு தலையீட்டின் காரணமாக இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தவெக வேட்பாளரிடம் தோல்விய தழுவிய திமுக வேட்பாளர்
இதனால், பரந்தாமனுக்கு பதிலாக தமிழன் பிரசன்னா களம் இறக்கப்பட்ட நிலையில், தவெக வேட்பாளரும், பள்ளி கல்வித் துறை அமைச்சருமான ராஜ்மோகனிடம் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் தான், பரந்தாமனுக்கு மீண்டும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது.
தாராபுரம் தொகுதி வேட்பாளர் சுகன்யா:
இதே போல, தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள சுகன்யா வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். தாராபுரம் தொகுதியை சேர்ந்த இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய அணி செயலாளராகவும் உள்ளார். உள்ளூர் அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டு வரும் இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். அப்போது, அவருக்கு திமுக தலைமை வாய்ப்பு மறுத்திருந்த நிலையில், தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக நேரடியாக போட்டி.. வேட்பாளர்கள் அறிவிப்பு!