AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சர்தார் 2 முதல் மண்டாட்டி வரை… தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் முக்கிய நடிகர்களின் படங்கள் லிஸ்ட் இதோ!

Theatre Release Movies List Here | இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் பல முக்கிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்த வகையில் என்னென்ன படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

சர்தார் 2 முதல் மண்டாட்டி வரை… தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் முக்கிய நடிகர்களின் படங்கள் லிஸ்ட் இதோ!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Sep 2026 18:12 PM IST

சர்தார் 2 படம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வா வாத்தியார். ஃபேண்டசி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சர்தார் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக தற்போது இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இந்தப் படம் நாளை 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

எபிக் படம்: நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி நடிகர் ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள படம் எபிக். இந்தப் படத்தினை இயக்குநர் ஆதித்யா ஹாசன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஆனந்த் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக வைஷ்ணவி சைத்தன்யா நடித்து உள்ளார். ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிரதம திரிஷ்டிய குட்டக்கர் படம்: மலையாள சினிமாவில் இயக்குநர் ஷாகத் இயக்கத்தில் உருவாகி உள்ளது இந்த பிரதம திரிஷ்டிய குட்டக்கர் படம். இந்தப் படத்தில் நடிகர்கள் பார்வதி திருவோத்து, விஜயராகவன், மேத்யூ தாமஸ், சித்தார்த் பரதன், உன்னிமய பிரசாத், அஸீஸ் நெடுமங்காடு, வினய் ஃபோர்ட், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், பிரவீன், பாலாஜி ஷர்மா, பிருந்தா மேனன், ஜெயஸ்ரீ, சுபர்ணா, சிராஜ், கேத்தரின் மரியா, நியாஸ் பேக்கர், ஸ்ரீஜித், டி, லால் ஜோசிகர் ரவி, டி, லால் ஜோசே உதயகுமார், ஜெயராஜ் கோழிக்கோடு என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… இணையத்தில் பேசுபொருளான A Mosquito in the Ear படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

ஆஷா படம்: மலையால சினிமாவில் இயக்குநர் சஃபர் சனல் எழுதி இயக்கி உள்ள படம் ஆஷா. இந்தப் படத்தில் நடிகர்கள் ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, விஜயராகவன், ரமேஷ் கிரிஜா, அஜயன் அடத், பிரசாந்த் அலெக்சாண்டர், ஜாய் மேத்யூ, ஷாரி, அம்ருதா கிருஷ்ணகுமார், ஃபெஹ்மின், பாக்யலட்சுமி, கோட்டை ரமேஷ், விஷக் விதுரா, அப்துல் கலாம், பிரசாந்த் மாதவன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மண்டாட்டி படம்: நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகி அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மண்டாட்டி. கடல் வாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நிலையில் படம் நாளை 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… Bigg Boss Tamil: என்னப்பா ஆச்சி.. பரணியை போலவே பிக் பாஸ் வீட்டிலிருந்து தப்பிக்க முயன்ற அன்சர்! – வைரலாகும் வீடியோ!

Follow Us