இணையத்தில் பேசுபொருளான A Mosquito in the Ear படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
A Mosquito in the Ear Movie | ஓடிடியில் தொடர்ந்து புதுப் புதுப் படங்கள் உலக அளவில் உள்ள மொழிகளில் வெளியாகி வருகின்றது. அதில் ஒரு சில படங்கள் மற்ற மொழிப் படங்களாக இருந்தாலும் அது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெறும்.
உலக அளவில் பல மொழிகளில் உருவாகும் படங்கள் கற்பனை கதைகளை மட்டும் இல்லாமல் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்தும் உருவாகி வருகின்றது. கற்பனையில் உருவாகும் படங்களைவிட உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் வெளியாகும் படங்களை பார்ப்பதில் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகம். ஏன் என்றால் ஒரு படத்தைப் பார்க்கும் போது அதற்கான கற்பனை கதையையே மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கிறார்கள். ஆனால் நாம் பார்க்கும் படம் யாருக்கோ ஏதோ ஒரு இடத்தில் நடந்த உண்மைச் சம்பவம் என்பது அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றது. அப்படி உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உருவான படம் தான் A Mosquito in the Ear. இந்தப் படத்தை இயக்குநர் நிக்கோலா ரின்சியாரி என்பவர் எழுதி இயக்கி உள்ளார்.
A Mosquito in the Ear என்ற இந்தப் படத்தில் நடிகர்கள் ஜேக் லேசி, நஸனின் போனியாடி, ரூஹி பால், மிக்கி சிங் உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு ஃபிராங்கோ பியர்சாண்டி என்பவர் இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் சிலாகித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
A Mosquito in the Ear என்ற படத்தின் கதை என்ன?
படத்தின் ஆரம்பத்திலேயே அமெரிக்காவில் இருந்து ஒரு தம்பதி கோவாலில் உள்ள ஒரு ஆசரமத்தில் பெண் குழந்தையை தத்தெடுப்பதற்கு வருவதாக காட்டுகின்றனர். துருதுருவென இருக்கும் அந்த குழந்தையை வெளிநாட்டு தம்பதி தத்தெடுத்து தங்களது மகளாக வளர்க்க நினைக்கின்றர். இந்தியாவில் குழந்தையை தத்தெடுக்க என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்துவிட்டு அந்த பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு விசா வாங்குவதற்கு செல்கிறார்கள்.




Also Read… விடுதலை படத்தை விட மண்டாட்டி படமே அதிக சவாலானது – நடிகர் சூரி
அப்படி அந்த தம்பதி மற்றும் அந்த குழந்தை ஒன்றாக பயணிக்கும் போது என்ன எல்லாம் நடக்கின்றது என்பதே இந்த A Mosquito in the Ear என்ற படத்தின் கதை. மொத்தம் 90 நிமிடங்கள் மட்டுமே இந்தப் படத்தின் நீளம் என்றாலும் மிகவும் அழகான ஒரு உணர்வை நம்முள் இந்த படம் கடத்துகிறது. இந்தப் படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் தற்போது காணக் கிடைக்கின்றது.
Also Read… பேட்ட படப்பிடிப்பின் போது… த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மாளவிகா மோகனன்