Bigg Boss Tamil: என்னப்பா ஆச்சி.. பரணியை போலவே பிக் பாஸ் வீட்டிலிருந்து தப்பிக்க முயன்ற அன்சர்! – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Ansar Escape Bid: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 2 நாட்களான நிலையில், விறுவிறுப்பாக நடக்கிறது. அந்த விதத்தில் பிக் பாஸ் சீசன் 1ல் நடிகர் பரணி வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றதுபோலவே, பிக் பாஸ் சீசன் 10ல் போட்டியாளர் அன்சர் தப்பிக்க முயன்ற வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் தொடங்கியது. இஇதுவரை மொத்தம் 9 சீசன்கள் முடிவடைந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி தொகுப்பாளராக தொகுத்துவரும் இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சாத்விகா, முனியம்மாள், ஜேசன், சாந்தினி உள்ளிட்ட 19 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். மேலும் குக்வித் கோமாளி (Cook With Comali) நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அன்சரும் (Ansar) இதில் கலந்துகொண்டார். இன்றுடன் இந்நிகழ்ச்சி தொடங்கி 2 நாட்களான நிலையில், இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற முயன்றுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 1ல் நடிகர் பரணி, பிக் பாஸ் வீட்டின் சுவரில் ஏறி தப்பிக்க முயன்ற நிலையில், அதுபோலவே அன்சரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து பாக்கிக்கா முயற்சி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அன்பான ஃபேன்ஸ் ரெடியா-ஆ? சூர்யா47 படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!
பிக் பாஸ் சீசன் 10 வீட்டிலிருந்து அன்சர் தப்பிக்க முயன்றதாக இணையத்தில் வைரலாகும் வீடியோ:
Day 2 dhaana da aachu 🤣😆🤣😆🤣#Biggbosstamil10 #biggbosstamil pic.twitter.com/1UjzTr8neK
— MsTom Prem (@Mstomprem) September 8, 2026
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் முகாமாக பிரபலமானவர் அன்சர். இவர் மேலும் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார். தனது நகைச்சுவையின் மூலம் இன்ஸ்டாகிராமில் மக்களை குஷிப்படுத்திவருபவர் இவர். இவருக்கு பிக் பாஸ் போட்டியாளர் ஜேசனுக்கும் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் வீட்டின் முதல் கேப்டனால் ஏற்பாடு செய்யப்பட்ட விவாதங்கள் போன்ற ஆரம்பகட்ட முக்கிய நிகழ்வுகளில் இருந்தது. இந்நிலையில், இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இதையும் படிங்க: வீட்டு தலைவரை எதிர்க்கும் போட்டியாளர்கள்.. லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் நடந்த சம்பவம் – பிக் பாஸ் 10 2-வது நாளில் வெடித்த சண்டை!
வித்தியாசமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 10 :
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி இன்றுடன் 2 நாட்களாகியுள்ளது. இந்த வீட்டின் முதல்வாரத்தில் கேப்டனாக ஹஸ்மேட்ஸ் மூலமாக சீரியல் நடிகை சாத்விகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் மற்ற சீசன்களை போல இல்லாமல், டெமாக்ரஸி ரூம் (ஜன நாயக அறை) போன்ற புதிய விஷயங்கள் பல இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளிலே போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த முறை வித்தியாசமாகவும், முதல் நாளிலே சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.